வந்திய தேவனாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்திருக்கும் நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படமான 'சர்தார்' படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது.
இதனை அவரது சகோதரரும், முன்னணி நட்சத்திர நடிகருமான சூர்யா தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
'இரும்புத்திரை', 'ஹீரோ' ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் பி. எஸ். மித்திரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'சர்தார்'.
இதில் நடிகர் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ராசி கண்ணா மற்றும் நடிகை ரெஜிஷா விஜயன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் பொலிவுட் நடிகர் ஷங்கி பாண்டே, முரளி ஷர்மா, முனீஸ் காந்த், இளவரசு, சஹானா வாசுதேவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜோர்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
புலனாய்வு திரில்லர் ஜேனரில் உருவான இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் எஸ். லக்ஷ்மண் குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
'சர்தார்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.
டீசரில் நடிகர் கார்த்தி சர்வதேச உளவாளி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதும், ஆறு விதமான ஒப்பனையில் அவர் தோன்றுவதும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது.
தீபாவளி விருந்தாக வெளியாகும் இந்த திரைப்படம் கார்த்தியின் வழக்கமான வெற்றி படங்களில் ஒன்றாக அமையும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM