காத்தான்குடியில் வீடுடைத்து மடிக்கணினியை திருடிய இரு சிறுவர்கள் கைது !

Published By: Vishnu

30 Sep, 2022 | 04:27 PM
image

கனகராசா சரவணன்

காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்த 3 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான மடிக்கணினி ஒன்றை திருடிச் சென்ற 15,16 வயதுடைய இரு சிறுவர்களை இன்று வெள்ளிக்கிழமை (30) கைது செய்துள்ளதாகவும் திருடப்பட்ட மடிக்கணினியை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கர்ப்பலா பிரதேசத்தில் சம்பவதினமான 29 ஆம் திகதி வியாழக்கிழமை பகல் குறித்த வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்ற சந்தர்ப்பத்தில் வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த அப்பிள் ரக மடிக்கணினி ஒன்றை திருடிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் மடிக்கணினியை திருடிச் சென்ற அந்தபிரதேசத்தைச் சேர்ந் 15, 16 வயதுடைய இருசிறுவர்களை கைது செய்ததுடன் மடிக்கணினியை மீட்டுள்ளனர்.

இதில் கைதுசெய்யப்பட்ட சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.  

இதேவேளை காத்தான்குடி பிரதேசத்தில் 180 மில்லிக்கிராம் ஐஸ்போதை பொருளுடன் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-21 18:16:14
news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03
news-image

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-03-21 16:32:43
news-image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு...

2025-03-21 17:05:15
news-image

உலக வங்கியின் பூகோள டிஜிட்டல் மாநாட்டில்...

2025-03-21 17:09:26
news-image

161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்

2025-03-21 16:45:59
news-image

ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு...

2025-03-21 17:07:00
news-image

ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன்...

2025-03-21 15:26:30
news-image

மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற...

2025-03-21 15:48:13
news-image

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்...

2025-03-21 15:24:44
news-image

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய 10...

2025-03-21 14:42:49