மேடை கோல் பந்தாட்டத்தை தமிழில் அறிமுகப்படுத்தும் 'சஞ்ஜீவன்'

By Digital Desk 5

30 Sep, 2022 | 04:22 PM
image

விளையாட்டுகளை முன்னிலைப்படுத்தி ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும், தமிழில் முதன்முறையாக ஸ்னூக்கர் எனும் மேடை கோல் பந்தாட்டத்தை மையப்படுத்தி 'சஞ்ஜீவன்' என்ற பெயரில் திரைப்படமொன்று தயாராகி இருக்கிறது.

அறிமுக இயக்குநர் மணி சேகர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'சஞ்ஜீவன்'. இதில் புதுமுக நடிகர் வினோத் லோகிதாஸ் கதையின் நாயகர்களில் ஒருவராக நடிக்க, அவருடன் நடிகர்கள் சிவ் நிஷாந்த், விமல் ராஜா, சத்யா என்.ஜே, நடிகைகள் யாசின், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

கார்த்திக் சொர்ணகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தனுஜ் மேனன் இசையமைத்திருக்கிறார். ஸ்னூக்கர் எனும் மேடைக்கோல் பந்தாட்டத்தை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை மலர் மூவி மேக்கர்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மலர்க்கொடி ரகுபதி பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' தமிழில் விளையாட்டுகளை மையப்படுத்தி ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும், ஸ்னூக்கர் எனப்படும் விளையாட்டை முன்னிலைப்படுத்தி சஞ்ஜீவன் தயாராகி இருக்கிறது. 

ஸ்னூக்கர் விளையாட்டு குறித்து மக்களிடத்தில் இருக்கும் எதிர்மறையான எண்ணத்தை அகற்றி, ஏனைய விளையாட்டுகளை போல நுட்பமான திறமையுடன் சமயோசிதமாக விளையாட்டுகளில் இதுவும் ஒன்று என்பதை எடுத்துரைக்கும் வகையில் இந்த படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறேன். விளையாட்டை கதையாக கொண்டிருந்தாலும், திரைக்கதையில் காதல், நகைச்சுவை என கமர்சியல் அம்சங்களை இணைத்துள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்.'' என்றார்.

படப்பிடிப்பு நிறைவடைந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது. முன்னோட்டத்தில் ஸ்நூக்கர் எனப்படும் மேடைக்குள் பந்தாட்ட விளையாட்டில் நடைபெறும் சூதாட்டமும், அதன் தொடர்பாக நடைபெறும் குற்ற சம்பவங்களும் பரபரப்பாக இடம் பெற்றிருப்பதால், ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது. 

புதுமுகங்கள் நடித்திருந்தாலும் கதைக்களமும், அதன் படமாக்கமும் புதிதாக இருந்தால், அதனை ரசிகர்கள் வரவேற்கவே செய்வார்கள். அந்த வகையில் சஞ்ஜீவனை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் ஜீவன் நடித்திருக்கும் 'பாம்பாட்டம்' படத்தின்...

2022-11-28 16:57:56
news-image

'வனமே என் இனமே' காணொளிப் பாடல்...

2022-11-28 15:09:56
news-image

விஜய் சேதுபதி நடிக்கும் 'டிஎஸ்பி' படத்தின்...

2022-11-28 13:57:24
news-image

திருமண பந்தத்தில் இணைந்தனர் கெளதம் கார்த்திக்...

2022-11-28 15:19:02
news-image

'சல்லியர்கள்' திரைப்படத்தின் இசை வெளியீடு

2022-11-28 11:30:23
news-image

வடிவேலு நடித்த 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'...

2022-11-26 17:20:26
news-image

65 வருட இசைப்பயணம்: பழம்பெரும் பின்னணிப்...

2022-11-26 17:19:47
news-image

அனுமதியின்றி நடிகர் அமிதாப் பச்சன் பெயர்...

2022-11-26 11:54:15
news-image

படப்பிடிப்புக்காக இலங்கைக்கு வருகை தரும் சூர்யா

2022-11-25 18:40:29
news-image

மஞ்சிமா மோகன் - கௌதம் கார்த்திக்...

2022-11-25 18:44:44
news-image

ஸோம்பி த்ரில்லராக தயாராகும் 'எஸ்டேட்'

2022-11-25 18:45:00
news-image

'காரி' திரை விமர்சனம்

2022-11-25 18:53:57