logo

மனநலத்தை மேம்படுத்தும் வழிகள் 

Published By: Sindu

30 Sep, 2022 | 04:16 PM
image

தாயாக இருப்பது மகிழ்ச்சி நிறைந்தது, பெருமைக்குரியது என்றாலும், வாழ்க்கையில் பொறுப்புகள் நிறைந்த பதவியும் இதுதான்.

அவற்றை சமாளிக்கும் பக்குவம் இல்லாமல் போகும் போது, மன அழுத்தம் ஏற்படுவது சகஜம். இதனால், பல தாய்மார்கள் பயத்துடனோ அல்லது விரக்தியடைந்த மனநிலையுடனோ இருக்கலாம். இவ்வாறு மன ஆரோக்கியம் பாதிக்காமல் செயல்படுவதற்கு சில வழிகள் உண்டு. அவற்றை தெரிந்துகொள்ளுங்கள்: 

வீட்டிலேயே இருக்கும் அம்மாக்கள் வீட்டு வேலைகள், குழந்தை பராமரிப்பு என நாள் முழுவதும் தங்கள் கடமை எனும் வட்டத்துக்கு உள்ளேயே சுற்றி வருகின்றனர். இதுவே மனச்சோர்வுக்கு காரணமாக அமையும் என உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். 

எனவே, ஒவ்வொரு நாளையும் உங்களுக்கானதாக மாற்றுவது அவசியம். 

அன்றாடப் பணிகளுக்கிடையே, உங்களின் தனிப்பட்ட தேவைகளையும் பூர்த்தி செய்யக் காட்டும் அக்கறைதான், இதற்கான சிறந்த வழி. 

உங்களின் உடை, சிகை அலங்காரம் உட்பட அனைத்து விஷயங்களிலும், மாற்றத்தைக் கொண்டு வாருங்கள். 

குழந்தை பிறந்த பின்பு நம் தனித்தன்மையை ஒதுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பெண்கள் தங்களை மகிழ்ச்சியாக்கும் செயல்களில் ஈடுபடலாம். 

புதிதாக ஒன்றைக் கற்க விரும்பினால், அதற்கான முயற்சியில் இறங்கலாம். இது தனிமை உணர்வைப் போக்கி, மனதுக்கு மகிழ்ச்சியூட்டும். 

இதன் மூலம் தேவையற்ற மன அழுத்தம் நீங்கி, மனம் ஒருநிலைப்படும். 

தற்போது, புதிய விஷயங்களை வீட்டிலிருந்தே கற்க, பல வசதிகள் வந்துவிட்டன. அதைப் பயன்படுத்தி உங்களுக்கான வெற்றிடத்தை நிரப்பலாம். 

வெளியுலகத் தொடர்பு: பல அம்மாக்கள் வீட்டிலேயே தங்களின் நேரத்தைச் செலவிடுவதால், வெளியுலகத் தொடர்பின்றி மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இதைத் தவிர்க்க, வெளியுலகத் தொடர்பை ஏற்படுத்தும் வகையில், பகுதி நேர வேலை செய்யலாம். தற்போது, இதற்கான பல வசதிகள் வந்துள்ளன. அவற்றைப் பயன்படுத்தி தங்களின் திறமைகளை வெளிக்கொணரலாம். 

புதிய அறிமுகங்கள் தேவை: பெண்கள் பலருக்கும், குழந்தை பெற்ற பின்பு நண்பர்களை உருவாக்குவது கடினமாகத் தோன்றலாம். குடும்பப் பொறுப்புகள் இருக்கும்போது, பிறருடன் நட்பை வளர்த்துக் கொள்ள நேரத்தை ஒதுக்குவது சிரமமாக இருக்கும். ஆனால், இந்தப் புதிய அறிமுகம், வாழ்வில் பலவற்றை கற்றுக்கொள்வதற்கு வழிசெய்யும். 

வெளியே செல்லுங்கள்: வெளியில் செல்லும்போது, உடல் நலத்துக்குத் தேவையான ‘விட்டமின் டி’ சத்தை இயற்கையாவே பெறுவதுடன், உங்களைப் புதுப்பித்த உணர்வையும் பெறுவீர்கள். பூங்காவிலோ, கடற்கரையிலோ நடக்கும்போது, சின்ன விஷயங்களையும் ரசிக்கப் பழகுவது முக்கியம். 

மனச்சோர்வைத் தவிருங்கள்: பலவற்றையும் மனதிற்குள்ளே அசை போடுவதால் மனஅழுத்தம் அதிகமாகும். இது நாளடைவில் மனச் சோர்வாக மாறும். இதைப் போக்குவதற்கு நம்பிக்கைக்கு உரியவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். பேசப் பிடிக்காத விஷயங்களை ஒரு புத்தகத்தில் எழுதுங்கள். இதனால், மனம் லேசாகும். 

மனச் சோர்வு தினசரி வாழ்க்கையைப் பாதித்தாலோ அல்லது தாங்க முடியாத அளவு உணர்ந்தாலோ மனநல மருத்துவரின் ஆலோசனையை நாடுவதற்குத் தயங்கக்கூடாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணையம் காப்போம்!

2023-06-09 20:11:22
news-image

அதிக நேரம் செல்போன் பார்க்கும் குழந்தைகளுக்கு...

2023-06-09 19:49:26
news-image

ரீனல் அற்றரி ஸ்டினோஸிஸ் எனும் சிறுநீரக...

2023-06-09 19:42:00
news-image

மூக்கு தண்டு வளைவு என்னும் பாதிப்பிற்குரிய...

2023-06-08 15:19:39
news-image

மயக்கவியல் சிகிச்சை, பக்க விளைவுகளை ஏற்படுத்துமா..?

2023-06-07 21:13:30
news-image

வயிற்றிலுள்ள அதிக கொழுப்பை கரைக்க உதவும்...

2023-06-07 21:13:01
news-image

உட்கார்ந்தபடியே தூங்கினால் இவ்வளவு பிரச்சினை வருமா?

2023-06-07 21:11:03
news-image

உடலிலுள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வெண்டிக்காய்

2023-06-07 20:26:33
news-image

சர்க்கரை நோயாளிகளுக்கு பக்கவாத பாதிப்பு ஏற்படுவது...

2023-06-06 18:39:42
news-image

இன்டர்ஸ்டீடியல் சிஸ்டிடிஸ் எனும் சிறுநீர்ப்பை அழற்சி...

2023-06-06 14:47:18
news-image

தூக்கமின்மையால் பாதிக்கப்படும் சர்க்கரை நோயாளிகளுக்கான தீர்வுகள்...

2023-06-06 16:33:44
news-image

மூளை திரவ கசிவு ( செரிப்ரல்ஃப்ளூயிட்...

2023-06-05 12:26:43