ரஷ்யா - உக்ரைன் போர் : 'எங்கள் முதுகை உடைக்கிறது' - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

By Vishnu

30 Sep, 2022 | 01:47 PM
image

ரஷ்யா-உக்ரைன் மோதலால் எண்ணெய் விலை உயர்வு குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. மேலும் இநத விலையேற்றம்  'எங்கள் முதுகை உடைக்கிறது' என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்திய பிறகு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனுடன் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய ஜெய்சங்கர், வளரும் நாடுகளில் தங்கள் எரிசக்தி தேவைகள் எவ்வாறு நிவர்த்தி செய்யப்படுகின்றன என்பதில் மிகவும் ஆழ்ந்த கவலை உள்ளது என்றார்.

உக்ரைன் போரைப் பற்றி பேசுகையில், இந்த மோதல் யாருடைய நலனுக்காகவும் இல்லை என்று நாங்கள் தனிப்பட்ட முறையிலும்  பகிரங்கமாகவும் நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்திற்கு திரும்புவதே சிறந்த வழியாகும்.

எண்ணெய் விலை பற்றி எங்களுக்கு கவலைகள் உள்ளன, ஆனால் நாங்கள் 2,000 டொலர் தனிநபர் பொருளாதாரத்தில் இருக்கிறோம். எண்ணெய் விலை எங்கள் முதுகை உடைக்கும் போது பெரும் கவலையாகின்றது. டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விற்பனை விலையில் மாற்றம் இல்லாமல் முறையே ₹96.72 மற்றும் ₹89.62 ஆக இருந்தது.

மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவின் மீது ஒரு சிறிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், ஜீ-7 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் கிரெம்ளினின் வருவாயைக் கட்டுப்படுத்த ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களின் மீதான எண்ணெய் விலை உச்சவரம்பைக் கொண்டு வந்துள்ளன.

இந்த மாத தொடக்கத்தில், ஜீ-7 நிதி அமைச்சர்கள் வெளியிட்ட அறிக்கையில், விலை வரம்பு குறிப்பாக ரஷ்ய வருவாய் மற்றும் உக்ரைன் போருக்கு நிதியளிக்கும் திறனைக் குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த இந்தியாவை கூட்டணியில் சேருமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் புது டெல்லி எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் இந்த திட்டத்தை 'கவனமாக ஆராய்வதாக' கூறியுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் பிரபல நடிகை காஸியானி பிணையில்...

2022-11-28 16:37:26
news-image

ரஷ்யா - உக்ரைன்  போரில் குளிா்காலம்,...

2022-11-28 17:01:08
news-image

துபாய், ஐரோப்பாவில் 30 தொன் போதைப்பொருள்...

2022-11-28 16:16:13
news-image

கணவனைக் கொலைசெய்து 22 துண்டுகளாக வெட்டி...

2022-11-28 15:04:43
news-image

சோமாலிய ஹோட்டலில் தீவிரவாதிகளுடன் படையினர் மோதல்:...

2022-11-28 13:14:47
news-image

பெண்கள் ஆடை பற்றிய கருத்தால் சர்ச்சை:...

2022-11-28 12:42:05
news-image

இந்தியா - பூடான் இணைந்து உருவாக்கிய...

2022-11-28 13:40:27
news-image

பாப்பரசருடனான தொலைபேசி உரையாடலை இரகசியமாக பதிவுசெய்த...

2022-11-28 12:26:34
news-image

மும்பைத் தாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன்...

2022-11-28 12:16:33
news-image

மின் கம்பத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய...

2022-11-28 10:35:31
news-image

கொவிட் ஊரடங்கிற்கு எதிராக சீனாவில் போராட்டம்...

2022-11-28 09:59:28
news-image

கெமரூனில் மண்சரிவு : 14 பேர்...

2022-11-28 08:45:21