கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரை கொலைசெய்த குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டுவந்த 3 பேரை பொலிஸார் சிலாபம் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையின் போது சந்தேகத்திற்குரியவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் சிலவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.