ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய ஒருவர், ஆணாக இருந்த போது பல சிறுவர் சிறுமியர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த சாலி ஆன் டிக்ஸன் என்பவர் பெண்ணாக வாழ்கிறார். ஆணாக பிறந்த இவர் 2014 ஆம் ஆண்டு பெண்ணாக மாறியவர்.
26 முதல் 33 வருடங்களுக்கு முன்னர் இவர் ஆணாக இருந்த காலத்தில் சிறுவர் சிறுமியர்கள் பலரை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.
5 சிறுமிகளையும் 2 சிறுவர்களையும் சாலி டிக்ஸன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என அதிகாரிகள் குற்றம் சுமத்தினர். 1989 முதல் 1996 வரையான காலத்தில் இக்குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் அப்போது 6 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட ஒருவர் 2019 ஆம் ஆண்டு இது தொடர்பாக முறைப்பாடு செய்ததையடுத்து சாலி ஆன் டிக்ஸனின் குற்றச்செயல்கள் அம்பலமாகியதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் சாலி ஆன் டிக்ஸனுக்கு 20 வருட சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM