சூறா­வ­ளிக்கு மத்­தியில் செய்தி வழங்­கும்­போது ஒலி­வாங்­கியை விசித்திரமாக மூடி வைத்­த­ருந்த ஊட­க­வி­ய­லாளர்

Published By: Vishnu

30 Sep, 2022 | 12:36 PM
image

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த  ஊட­க­வி­ய­லாளர் ஒருவர், சூறா­வ­ளிக்கு மத்­தியில் தொலைக்­காட்சி ஊடாக செய்தி வழங்கிக் கொண்­டி­ருந்­த­போது, மழை­யி­லி­ருந்து தனது ஒலி­வாங்­கியை பாது­காப்­ப­தற்­காக அதை ஆணு­றை­யினால் மூடி வைத்­தி­ருந்­தமை பலரின் கவ­னத்தை ஈர்த்­துள்­ளது.

ஐயான் சூறா­வளி, கரீ­பியன் மற்றும் அமெ­ரிக்க கிழக்குக் கரை­யோரப் பிராந்­தி­யங்­களை தாக்­கி­யுள்­ளது. 

புளோ­ரிடா மாநி­லத்தின் போர்ட் மேயர்ஸ் நகரில், ஐயான் சூறா­வளி நிலை­வரம் தொடர்­பாக செய்­தி­யாளர் கைலா காலேர் நேர­டி­யாக செய்திச் சேக­ரிப்பில் ஈடு­பட்­டி­ருந்தார். 

அவ்­வே­ளையில் மழை பெய்து கொண்­டி­ருந்­ததால், தனது ஒலி­வாங்­கயை (மைக்) அவர் ஆணுறை ஒன்­றினால் மூடி வைத்­தி­ருந்தார். 

 தொலைக்­காட்சி அலை­வ­ரி­சையில் இச்­செய்தி ஒளி­ப­ரப்பை பார்த்துக் கொண்­டி­ருந்த பல­ருக்கு இக்­காட்சி வியப்பை ஏற்­ப­டுத்­தி­யது. 

இது தொடர்­பாக சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் பலர் விமர்­சித்­தனர்

எனது ஒலி­வாங்­கியின் மேல் என்ன உள்­ளது என பெரும் எண்­ணிக்­கை­யானோர் கேட்­கின்­றனர் என கைலா காலேர் தெரி­வித்­தள்ளார்.  

'அது என்­ன­வென்று நீங்கள் நினைக்­கி­றீர்­களோ அதுவே தான். அது ஓர் ஆணுறை. அது எனது ஒலி­வாங்­கியை பாது­காக்­கி­றது. இந்த ஒலி­வாங்­கியை நனைய விட முடி­யாது. 

அங்கு அதிக காற்றும் அதிக மழையும் இருந்­தது. எனவே, ஒலி­வாங்­கியை ஆணு­றை­யொன்­றினால் மூடினோம்' என கைலா காலேர் கூறி­யுள்ளார்.

கைலாவின் கையில் ஒலி­வாங்கி இருக்கும் படத்தை அவரின் சக ஊட­க­வி­ய­லாளர் ஜெப் புத்­தே­ராவும் சமூ வலைத்தளத்தில் வெளியிட்டு, 'ஆம் அது ஓர் ஆணுறை. நூம் பாதுகாப்பாகன செய்தி அறிக்கையிடல் முறையை பின்பற்றுகிறோம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right