நகை கொள்ளை : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கைது

Published By: Digital Desk 5

30 Sep, 2022 | 12:23 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

தலங்கம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்து தங்க நகைகள் உட்பட சொத்துகளை கொள்ளையிட்டு சென்றமை தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 7 ஆம் திகதி தலங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றை வாடகைக்கு பெற்று கொள்ளும் நோக்கத்தில் வீடொன்றில் அத்துமீறி நுழைந்து  வீட்டு உரிமையாளரை அச்சுறுத்தி அவரை  கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு அங்கிருந்து தங்க நகைகள் மற்றும் சொத்துகளை திருடிச் சென்றதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கபெற்று இருந்தது.

இந்நிலையில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில்  குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள்  ஐவரும்  பேராதனை, பிலிமதலாவ மற்றும் தோம்பே பிரதேசங்களில்  கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

 கைது செய்யப்பட்டவர்களில் மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 27 முதல் 50 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் பேராதனை, பிலிமத்தலாவை மற்றும் தோம்பே பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்கள்.

சுந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட  விசாரணைகளின் போது இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் முறைப்பாடு செய்யப்பட்டவரின் கடை ஒன்றை முன்னர் வாடகைக்கு பெற்று சிற்றுண்டிச்சாலை ஒன்றினை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  அவர்களால் திருடப்பட்ட தங்க நகைகள் கொழும்பு மருதானை மற்றும் பேராதனை பகுதியில் உள்ள தங்க நகை அடகு வைக்கும் நிலையத்தில் விற்று பணம் பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெத்துள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுமார் 300 கிலோ போதைப்பொருட்களுடன் 6...

2025-11-12 10:41:26
news-image

எதிர்க்கட்சியினரிடம் ஹிட்லர் போல் கத்தி, ஐ.எம்.எப்....

2025-11-12 11:17:11
news-image

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன்...

2025-11-12 10:22:56
news-image

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

2025-11-12 09:59:37
news-image

பெருந்தோட்ட மக்களுக்கான தீர்வுகளை மலினப்படுத்தும் எதிர்க்கட்சியின்...

2025-11-12 10:00:34
news-image

வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு...

2025-11-12 09:38:17
news-image

குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள...

2025-11-12 09:37:06
news-image

தமிழ் மக்களுக்கு அரசியல் நோக்கமின்றி அபிவிருத்தி...

2025-11-12 09:26:45
news-image

சுற்றுலா செல்லும் போது சமூக வலைதளங்களில்...

2025-11-12 09:25:43
news-image

அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய...

2025-11-12 09:23:49
news-image

இன்றைய வானிலை

2025-11-12 06:42:43
news-image

விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

2025-11-11 16:48:02