நானுஓயா நகர் குப்பை மேட்டிற்கு என்னவாகப்போகிறது ?

By T. Saranya

30 Sep, 2022 | 10:53 AM
image

செ.திவாகரன்

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் அமைந்துள்ள நுவரெலியா பிரதேச சபையின் கீழ் இயங்கும் நானுஓயா பிரதான நகரில் மகாத்மா காந்தியின் நினைவு மண்டபத்தின்  அருகில்  கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்  பொது மக்கள் பல்வேறு போராட்டங்களை செய்து குப்பை கொட்டுவதனை நிறுத்தினர். 

முற்றிலும் அகற்றப்பட்ட குப்பைகளை மீண்டும் அவ்விடத்தில் கொட்டுவதால் நானுஓயா பிரதான நகரம்  அசுத்தப்படுவதாகவும் , சுகாதார சீர்கேடான நிலையில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவ்வீதியில் பயணிக்கும் பொது மக்களும் , மாணவர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட நானுஓயா நகரம் வெளிநாட்டு,உள்நாட்டு  சுற்றுலா பிரயாணிகளினால் அதிகமாக விரும்பப்படும் நகரமாகும்.

நுவரெலியா பகுதிக்கான ரயில் சேவையின் மத்திய நிலையமாகவும் காணப்படுகின்றன. 

நானுஓயா நகரம் வரலாற்று ரீதியாகவும் முக்கிய இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நானுஓயா பிரதான நகரில் வர்த்தக நிலையங்களில், வீடுகளில் சேகரிக்கப்படும் அழுகிய உணவு பொருட்கள் , மாமிச கழிவுகள், எளிதில் மக்கிப்போகாத பொலித்தீன் பைகளில் கட்டப்பட்ட சில கழிவுப்பொருட்கள் இவ்விடத்தில் நுவரெலியா பிரதேச சபையின் மூலம்  குப்பைகளைச் சேகரித்து வாகனத்தின் மூலம்  கொட்டப்படுகின்றது.

இதனால் குப்பைகளுடன் மழை நீர் சேரும் போது சாக்கடைகள் நிறைந்த குப்பை நீராக மாறுகின்றன, மொத்தத்தில் மண், நீர் என்று மொத்த சுற்று சூழலுமே நச்சாக மாறுகின்றன .

இந்நிலையில் அழகான இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுப்பதற்காக இப்பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்கு வீசும் துர்நாற்றங்களினால் மனம் நொந்து வருகின்றதை காணக்கூடியதாக இருக்கின்றது.

எனவே குறித்த பகுதிக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகள் இதனை கவனத்திற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்களும் , மாணவர்ககளும் கோரிக்கை விடுக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை போன்ற நாடுகளி;ற்கு உதவுவதற்கு ஜி20இன்...

2022-12-02 12:36:18
news-image

அக்கரைப்பற்றுக்கு ஹெரோயின் கடத்தி வந்தவர் கைது

2022-12-02 11:49:42
news-image

உலகின் செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில்...

2022-12-02 12:12:05
news-image

இலங்கையின் அரசியல் கட்சிகளிற்கு அதிகாரத்தை கைப்பற்றுவது...

2022-12-02 11:27:45
news-image

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும்...

2022-12-02 11:47:59
news-image

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை...

2022-12-02 10:58:52
news-image

இன்றும் யாழ். கல்லுண்டாயில் 3ஆவது நாளாக...

2022-12-02 10:54:22
news-image

பணி இடை நிறுத்தப்பட்டுள்ள வைத்தியர் சமல்...

2022-12-02 10:25:52
news-image

இரட்டைக் கொலை வழக்கில் இரட்டை மரண...

2022-12-02 10:28:09
news-image

அனலைதீவு துறைமுகத்தில் கடல் அட்டை பண்ணைக்கு...

2022-12-02 10:32:00
news-image

வருமான வரி கணக்கை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம்...

2022-12-02 10:32:49
news-image

2024 இல் 30 இலட்சம் சுற்றுலாப்பயணிகளை...

2022-12-02 09:07:32