பலருக்கும் பொடி மசாஜ் செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால், இதற்காக மசாஜ் சென்டர் செல்ல தயங்கிவருகின்றனர். அதற்குக் காரணம், பொடி மசாஜ் அல்லது ஸ்பாவால் ஏற்படும் நன்மைகளையும், அதன் செயல்முறைகளையும் அறியாததுதான்.
பொடி மசாஜ் உடல் ரீதியாக மட்டுமின்றி மன ரீதியாகவும் பலனளிக்கிறது. பொடி ஸ்பா சிறந்த மருத்துவ முறையாகும்.
வாசனை எண்ணெய்கள் அல்லது க்ரீம்களுடன் மசாஜ் செய்கையில், இரத்த ஓட்டம் அதிகரிக்க உதவுவது மட்டுமின்றி தோல் செல்களில் அதிக ஊட்டச்சத்துகளைப் பெற உபயோகமாக அமைகிறது.
பொடி ஸ்பா தசை இறுக்கம், சோர்வைப் போக்க உதவுகிறது. அதன் காரணமாகத்தான், பெரும்பாலானோர் பொடி ஸ்பாவில் தன்னை மறந்து தூங்குகின்றனர். இதனால் சருமத்தில் பல நன்மைகள் ஏற்படுகின்றன.
மன அழுத்த ஹொர்மோன்களைக் குறைக்கிறது.
தோல் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
மன அழுத்தம், கவலையைக் குறைக்கிறது.
உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கிறது.
உடல் சோர்வாகவும், மிகுந்த வலியுடனும் இருந்தால், அதனைப் போக்குவதற்கு அனைவரும் மேற்கொள்ளும் ஒரு முறை தான் மசாஜ்.
வாரத்திற்கு ஒரு முறை உடலுக்கு மசாஜ் செய்து குளித்து வந்தால், உடல் வலி குறைவதோடு, உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
அதுமட்டுமின்றி, உடலுக்கு ஒயில் மசாஜ் செய்வதால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, உடல் ரிலாக்ஸாக இருக்கும். அதிலும் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி ஆயில் மசாஜ் செய்து கொண்டால், அது உடலுக்கு புத்துணர்ச்சியளிக்கும்.
உடலுக்கு மசாஜ் செய்ய நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் மட்டுமன்றி வாசைன நிறம்பிய எண்ணெய்கள் பல பயன்படுகின்றன. இந்த எண்ணெய்கள் அனைத்தும் உடல் வலியைப் போக்குவதோடு, சருமத்தில் உள்ள பல பிரச்சினைகளைப் போக்க வல்லது.
குறிப்பாக ஸ்ட்ரெட்ச் மார்க், சரும வறட்சி, கடினமான சருமம் போன்ற பிரச்சினைகளை, உடலுக்கு மசாஜ் செய்வதன் மூலம் தடுக்கலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM