அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரகடனம் குறித்து ஐ.நா விசேட அறிக்கையாளர் கடும் விசனம்

Published By: Digital Desk 3

30 Sep, 2022 | 10:42 AM
image

(நா.தனுஜா)

அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான பிரகடனம் குறித்து தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ற் வோல், போராட்டங்களில் ஈடுபடுவதற்கான பொதுமக்களின் உரிமைக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்கவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியிருக்கின்றார்.

1955 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தின்கீழ் கொழும்பிலுள்ள சில பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், அதுகுறித்து கரிசனையை வெளிப்படுத்தி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ற் வோல் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கையில் பொதுமக்கள் ஒன்றுகூடுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்த அறிவிப்பு தொடர்பில் நான் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றேன். 

போராட்டங்களில் ஈடுபடுவதற்கான பொதுமக்களின் உரிமைக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்கவேண்டிய அதேவேளை, இத்தகைய மட்டுப்பாடுகள் நியாயமானவையாகவும் அவசியமானவையாகவும் பொருத்தப்பாடுடையவையாகவும் இருப்பதை உறுதிசெய்யவேண்டும் என்று அவர் அப்பதிவில் வலியுறுத்தியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right