“ வானமே எல்லை ” - இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே

By Digital Desk 5

30 Sep, 2022 | 12:50 PM
image

(நா.தனுஜா)

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் (ஐடெக் - ஐவுநுஊ) ஊடாக செயற்திறனைக் கட்டியெழுப்புவதில் இலங்கை - இந்திய நாடுகளுக்கு இடையில் நிலவும் கூட்டிணைவின் 58 ஆவது வருட நிறைவை முன்னிட்டு புதன்கிழமை (28) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் 'ஐடெக் தினம்' கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பிரதம விருந்தினராகவும் கல்வியமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டிருந்தனர்.

அதுமாத்திரமன்றி இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் முன்னாள் இலங்கை பயனாளர்கள், இந்த ஒத்துழைப்புச் செயற்திட்டத்தின்கீழ் இந்தியாவில் பல்வேறு பயிற்சிநெறிகளில் பங்கேற்ற பலதரப்பட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் தொழில்சார் நிபுணர்கள் உள்ளடங்கலாக நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

அதன்படி நிகழ்வில் உரையாற்றிய கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலம் நிலவிவரும் வரலாற்று ரீதியான மிகநெருங்கிய தொடர்பு குறித்து சுட்டிக்காட்டியதுடன் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் ஊடாக வருடாந்தம் இலங்கையர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில்களுக்கும் அண்மைய சில மாதங்களாக இந்தியாவினால் வழங்கப்பட்ட நிதியுதவிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

 அதுமாத்திரமன்றி உயர்கல்வி, திறன்விருத்தி, விஞ்ஞான மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்குக் காணப்படும் வாய்ப்பு குறித்தும் அவர் பிரஸ்தாபித்தார்.

அதேவேளை கடந்த பல வருடகாலமாக இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் செயற்திட்டங்கள் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் காண்பித்துவரும் அக்கறை குறித்து நினைவுகூர்ந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, அதன் முக்கியத்துவத்தை மீளவலியுறுத்தியதுடன் கல்வி மற்றும் பயிற்சி வழங்கலில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கு 'வானமே எல்லை' என்றும் சுட்டிக்காட்டினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்கரைப்பற்றுக்கு ஹெரோயின் கடத்தி வந்தவர் கைது

2022-12-02 11:49:42
news-image

இலங்கையின் அரசியல் கட்சிகளிற்கு அதிகாரத்தை கைப்பற்றுவது...

2022-12-02 11:27:45
news-image

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும்...

2022-12-02 11:47:59
news-image

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை...

2022-12-02 10:58:52
news-image

இன்றும் யாழ். கல்லுண்டாயில் 3ஆவது நாளாக...

2022-12-02 10:54:22
news-image

பணி இடை நிறுத்தப்பட்டுள்ள வைத்தியர் சமல்...

2022-12-02 10:25:52
news-image

இரட்டைக் கொலை வழக்கில் இரட்டை மரண...

2022-12-02 10:28:09
news-image

அனலைதீவு துறைமுகத்தில் கடல் அட்டை பண்ணைக்கு...

2022-12-02 10:32:00
news-image

வருமான வரி கணக்கை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம்...

2022-12-02 10:32:49
news-image

2024 இல் 30 இலட்சம் சுற்றுலாப்பயணிகளை...

2022-12-02 09:07:32
news-image

யாழில் நெற்பயிர்கள் பொட்டாசியம் இன்மையால் நுனி...

2022-12-02 10:20:59
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-12-02 08:55:01