வரி அதிகரிப்பைக் காட்டிலும் அரச வருவாயை அதிகரிக்க அரசாங்கத்திடம் முறையான திட்டமில்லை - நாலக கொடஹேவா

By Digital Desk 5

30 Sep, 2022 | 10:03 AM
image

(இராஜதுரை ஹஷான்)

வரையறையற்ற அரசமுறை கடன் பொருளாதார நெருக்கடிக்கு  பிரதான காரணம் என குறிப்பிடப்படுகின்றன நிலையிலும் அரசாங்கம் பொருளாதார மீட்சிக்காக கடன் பெறுவதில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

நாட்டு மக்கள் மீது வரி சுமத்துவதை காட்டிலும், அரச வருமானத்தை அதிகரிக்க அரசாங்கத்திடம் எவ்வித திட்டமும் கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் காங்கிரஸ் கட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கை மத்திய வங்கியின் தரவின் படி ஆகஸ்ட் மாதத்தின் பணவீக்கம் 70.2 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.எதிர்வரும் காலங்களில் பணவீக்கம் சடுதியாக அதிகரித்து செல்லும்.

பணவீக்கம் அதிகரிப்பினால் இறக்குமதி பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதுடன்,இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டதால் அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டு மக்கள் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்கள்.

கடந்த அரசாங்கம் வரையறையற்ற வகையில் கண்மூடித்தனமாக நாணயம் அச்சிட்டதால் பணவீக்கம் தீவிரமடைந்தது.

கடந்த அரசாங்கம் செய்த தவறையே தற்போயைத அரசாங்கமும் தொடர்கிறது.பொருளதார நெருக்கடிக்கு தீர்வு காண அரச செலவுகளை நிச்சயம் கட்டுப்படுத்த வேண்டும்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரச வருமானம் 3500 பில்லியன் டொலர் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் செலவு 3851 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க அண்மையில் சமர்ப்பித்த இடைக்கால வரவு செலவு திட்டத்தில் அரச செலவு 4427 பில்லியன் டொலர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டிய பின்னணியில் அரச செலவுகளை அதிகரிக்கும் வகையில் அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது.இராஜாங்க அமைச்சுக்கள் 38 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்,எதிர்வரும் நாட்களில் அமைச்சரவை அமைச்சுக்களையும் விஸ்தரிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

வரையறையற்ற அரசமுறை கடன் பொருளாதார நெருக்கடிக்கு  பிரதான காரணம் என குறிப்பிடப்படுகின்றன நிலையிலும் அரசாங்கம் பொருளாதார மீட்சிக்காக கடன் பெறுவதில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.நாட்டு மக்கள் மீது வரி சுமத்துவதை காட்டிலும்,அரச வருமானத்தை அதிகரிக்க அரசாங்கத்திடம் எவ்வித திட்டமும் கிடையாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும்...

2022-12-02 10:57:14
news-image

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை...

2022-12-02 10:58:52
news-image

இன்றும் யாழ். கல்லுண்டாயில் 3ஆவது நாளாக...

2022-12-02 10:54:22
news-image

பணி இடை நிறுத்தப்பட்டுள்ள வைத்தியர் சமல்...

2022-12-02 10:25:52
news-image

இரட்டைக் கொலை வழக்கில் இரட்டை மரண...

2022-12-02 10:28:09
news-image

அனலைதீவு துறைமுகத்தில் கடல் அட்டை பண்ணைக்கு...

2022-12-02 10:32:00
news-image

வருமான வரி கணக்கை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம்...

2022-12-02 10:32:49
news-image

2024 இல் 30 இலட்சம் சுற்றுலாப்பயணிகளை...

2022-12-02 09:07:32
news-image

யாழில் நெற்பயிர்கள் பொட்டாசியம் இன்மையால் நுனி...

2022-12-02 10:20:59
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-12-02 08:55:01
news-image

யாழ். வரணி குளத்தில் இருந்து சடலம்...

2022-12-02 09:03:04
news-image

நாட்டின் பல மாகாணங்களில் 75 மி.மீ....

2022-12-02 08:50:24