தேசிய கொள்கை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பில் இரு உப குழுக்களை அமைக்க தேசிய சபையில் தீர்மானம்

Published By: Vishnu

29 Sep, 2022 | 09:54 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஆளும் கட்சி, எதிர்க்கட்சியின் பங்குபற்றலுடன் நடைபெற்ற தேசிய சபையின் முதலாவது கூட்டத்தில் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பில் இரு உப குழுக்களை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்களுக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தேசிய சபையின் அங்குரார்ப்பண நிகழ்வு அதன் தலைவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் இன்று (29) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

தேசிய சபையின் முதலாவது கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருக்கவில்லை.

அத்துடன் தேசிய சபை கூட்டத்துக்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பதிலாக எதிர்க்கட்சியின் பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல கலந்துகொண்டுள்ளதுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளி கட்சிகளின் தலைவர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், மனோகணேசன், ரிஷாத் பதியுதீன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியாேரும்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து அரசாங்கத்துடன் இணைந்துள்ள அமைச்சர் மஹிந்த அமரவீரவும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது தேசிய சபையின் முதலாவது கூட்டத்தில் இரு உப குழுக்களை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தேசிய கொள்கைகளை வகுப்பதற்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான பாராளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளைத் தீர்மானிப்பது மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் மத்திய கால நிகழ்ச்சித்திட்டத்தை உருவாக்குவது தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது என்பனவே இந்த உப குழுக்கள் அமைக்கப்படுவதற்கான நோக்கங்களாகும்.

இக்கூட்டத்தில் ஆளும் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமர் தினேஷ் குணவர்த்தன, சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஆளும் கட்சியின் பிரதமகொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அமைச்சர் டிரான் அலஸ், இராஜாங்க அமைச்சர்களான சிவநேசதுரை சந்திரகாந்தன், சிசிர ஜயகொடி, பாராளுமன்ற உறுப்பினர்களான அசங்க நவரத்ன, ஜீவன் தொண்டமான், நாமல் ராஜபக்ஷ், ஜோன்டன் பெர்னாந்து, சாகர காரியவசம், அலி சப்ரி ரஹீம், ரோஹித அபேகுணவர்தன, வஜிர அபேவர்தன, ஆகியோர் கலந்துகொண்டனர்.  பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவும் இச்சந்தர்ப்பத்தில் இணைந்துகொண்டிருந்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்த்தன கடந்த 20ஆம் திகதி தேசிய சபை உருவாக்குவது தொடர்பான பிரேரணையைப் பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்ததுடன், இப்பிரேரணை எதிர்ப்பு இன்றி அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய இதுவரை பெயரிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை சபாநாயகர் கடந்த 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.

தேசிய சபையின் முதலாவது கூட்டத்தின் பின்னர் பிரதமர் தினேஷ் குணவர்த்தன கருத்துத் தெரிவிக்கையில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேசிய சபையின் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். தேசிய ரீதியில், பாராளுமன்றத்தின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும், பொது மக்களுக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையில் காணப்படும் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துவதற்கும் திறக்கப்பட்ட புதியதொரு கதவாக இது அமையும் என்றார்.

அத்துடன் சகல பாராளுமன்ற அமர்வு வாரத்திலும் வியாழக்கிழமை தேசிய சபையைக் கூட்டுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விசாரணைக்குச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல்...

2023-03-20 14:37:36
news-image

இலங்கையின் உணவு பாதுகாப்பு நிலை -...

2023-03-20 13:58:01
news-image

அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா...

2023-03-20 13:32:11
news-image

நெற் செய்கையாளர்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்க 36...

2023-03-20 13:30:28
news-image

அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் புதிய உணவு...

2023-03-20 13:14:55
news-image

யாழில் கஞ்சா கடத்தலுக்கு மோட்டார் சைக்கிளைக்...

2023-03-20 12:28:42
news-image

மட்டக்களப்பு பூநொச்சிமுனை பாலம் திருத்தப்படாமையால் மக்கள்...

2023-03-20 12:19:55
news-image

இலங்கை மீனவர்கள் அறுவர் இந்தியாவில் கைது

2023-03-20 12:10:11
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதியர் விடுதியில்...

2023-03-20 12:52:07
news-image

இருவேறு வாகன விபத்துக்களில் ஒருவர் பலி...

2023-03-20 11:48:34
news-image

ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாவை பெண்கள் சக்தியே...

2023-03-20 13:18:53
news-image

பதுளை - பசறையில் 40 அடி...

2023-03-20 12:21:02