நாட்டில் உள்ள வீதிக்கடவைகளின் நிறம் மாற்றப்படவள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் நிஹால் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக கொழும்பில் உள்ள வீதிக்கடவைகளின் நிறத்தை மஞ்சல் நிறத்திலிருந்து வெள்ளை நிறமாக மாற்றுவதற்கு நடவடிக்கை அடுத்தவாரம் முதல் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன் பிறகு நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள வீதிக்கடவையின் நிறம் வெள்ளையாக மாற்றப்படும்.

பனிப்பொழிவு ஏற்படும் நாடுகளில் மாத்திரமே வீதிக்கடவைகள் மஞ்சல் நிறமாக காணப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.