டோக்கியோவில் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவைச் சந்தித்து கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே ஆற்றிய பணிகளை அடிப்படையாகக் கொண்டு, 'உலகின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் இந்தியா-ஜப்பான் உறவுகள் தகுந்த பங்கை வகித்துள்ளதாக தெரிவித்தார்.
ஜூலை மாதம் படுகொலை செய்யப்பட்ட அபேயின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் சென்றார். அபே இந்தியா மற்றும் ஜப்பான் உறவுகளை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றதாகவும், அவற்றை பல புதிய பகுதிகளுக்கு விரிவுபடுத்தியதாகவும் பிரதமர் மோடி பிரதமர் கிஷிடாவிடம் கூறினார்.
துக்க நேரத்தில் இன்று சந்திக்கிறோம். இன்று ஜப்பானுக்கு வந்த பிறகு, எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஏனென்றால் நான் கடந்த முறை வந்தபோது, அபே சானுடன் நான் மிக நீண்ட நேரம் உரையாடினேன். வெளியேறிய பிறகு, இதுபோன்ற ஒரு செய்தியைக் கேட்க நேரிடும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை என பிரதமர் இதன் போது குறிப்பிட்டார். அபே செய்த அனைத்து நல்ல பணிகளையும் இந்திய மக்கள் நினைவுகூருகிறார்கள் என்று மோடி மேலும் கூறினார்.
இரு நாடுகளின் பகிரப்பட்ட உலகளாவிய கண்ணோட்டத்தின் வளர்ச்சியில் அவர்களின் நட்பு முக்கிய பங்கு வகித்ததாகவும் கூறினார். சுதந்திரமான, திறந்த மற்றும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பார்வையை கருத்தியல் செய்வதில் அபேயின் பங்களிப்புகளையும் அவர் குறிப்பிட்டார்.
உங்கள் தலைமையின் கீழ், இந்தியா-ஜப்பான் உறவுகள் மேலும் ஆழமடையும், மேலும் உயரும் என்று நான் நம்புகிறேன். உலகின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் நாம் பொருத்தமான பங்கை வகிக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிவதாக பிரதமர் மோடி கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM