இலங்கை டிசம்பர் என்கின்றது - உறுதியாக தெரிவிக்க முடியாது என்கின்றது சர்வதேச நாணயநிதியம்

By Rajeeban

29 Sep, 2022 | 03:08 PM
image

(Nikkei  - asia)

டிசம்பர் மாதத்திற்குள் சர்வதேச நாணயநிதியத்தின் நிதிஉதவி கிடைப்பது குறித்து இலங்கை அரசாங்கம் அதிகளவு நம்பிக்கையுடன் காணப்படுகின்றது எனினும் பல தரப்பு கடனளிப்பவர்கள் டிசம்பர் மாதத்திற்குள் நிதி உதவி கிடைப்பது நிச்சயமற்ற விடயம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் அதிகளவு கடன்களை வழங்கிய  நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளை பொறுத்தவிடயம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடன் நிவாரணம் குறித்த பேச்சுவார்த்தைகள் நீண்டகாலம் நீடிக்க கூடியவை என்பதால்  கால எல்லையை எதிர்வு கூறுவது கடினமான விடயம் என தெரிவித்துள்ள இலங்கை குறித்த சர்வதேச நாணயநிதியத்தின் அதிகாரிகளான பீட்டர் புருவரும் மசஹிரோ நொசாக்கியும் இந்த செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைவரும் விரைந்து செயற்படவேண்டும் இதன் காரணமாக இலங்கை நெருக்கடியிலிருந்து விரைவாக மீள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

தனது வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியுடன் மல்லுக்கட்டும் இலங்கை தனக்கு மிகவும் அவசியமாகவுள்ள 2.9 பில்லியன்  டொலரை பெற்றுக்கொள்வதற்காக  சர்வதேச நாணயநிதியத்துடன் செப்டம்பர் 1 ம் திகதி பணியாளர் மட்டஇணக்கப்பாட்டை எட்டியது.

இலங்கையின் ஒரு வருடகால பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 70 வீதமாக காணப்பட்டது.

பொதுமக்கள் அத்தியாவசியப்பொருட்களிற்கான தட்டுப்பாட்டை தொடர்ந்தும் எதிர்கொள்கின்றனர்.

முன்னதாக இந்த வருட ஆரம்பத்தில் தனது அந்நியசெலாவணி கையிருப்பு முற்றாக முடிவடைந்ததை தொடர்ந்து  இலங்கை வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டது.

திருப்பிசெலுத்தக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை என நாங்கள் அறிவித்தோம் என மத்திய வங்கி ஆளுநர் மே மாதம் தெரிவித்தார்.முன்கூட்டியே வங்குரோத்து நிலையை  அவர் உறுதி செய்தார்.

எங்கள் நிலைப்பாடு தெளிவானது கடன்வழங்கியவர்கள் முன்வந்து மறுசீரமைப்பிற்கு உதவும் வரும் கடனை திருப்பி செலுத்த முடியாது என அவர் தெரிவித்தார்.

இலங்கையின் நிலவரம் குறித்து தெளிவுபடுத்தும் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்பது குறித்து ஆராயும் இணையவழி கலந்துரையாடலில் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையின் நிதியமைச்சு கடன்வழங்குநர்களுடன்  ஈடுபட்டது.

கொவிட்பெருந்தொற்றுடன் சில கொள்கை தவறுகளும் அதனால் உருவான நெருக்கடியும் இலங்கை பொருளாதாரம் முடங்குவதற்கான அந்நிய செலாவணி கையிருப்புகள் முற்றாக தீர்ந்து போவதற்கான அரசாங்கம் கடன்களை மீள செலுத்தவேண்டிய நிலை ஏற்படுவதற்கான காரணம் என சமர்ப்பிக்கப்பட்ட கையேட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓமான் பணிப்பெண்கள் விவகாரம் : மத்திய...

2022-12-01 14:33:01
news-image

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக மலையகத்தில் ஒன்றிணைந்த...

2022-12-01 14:32:19
news-image

உலக அழகி பிரியங்கா சோப்ரா மீதே...

2022-11-29 16:09:16
news-image

மத்திய வங்கியின் ஆளுநருக்கு மாதம் நான்கு...

2022-11-30 15:48:59
news-image

விடத்தல்தீவு எனும் இயற்கைப் வனத்தைப் பாதுகாப்போம்

2022-11-29 17:25:43
news-image

உணரப்பட வேண்டிய பெறுமதி

2022-11-28 15:05:06
news-image

உலக நீதி சீர்குலைந்த நாள் :...

2022-11-28 13:21:05
news-image

ஸ்கொட்லாந்தும் சுயநிர்ணய உரிமையும் - ஒரு...

2022-11-28 12:29:41
news-image

உலகப் போர் நினைவுச் சின்னங்களின் பின்னணியில்...

2022-11-28 11:05:34
news-image

அரசியல் தீர்வு: முஸ்லிம் தரப்பின் நிலைப்பாடு...

2022-11-27 17:30:18
news-image

உக்ரேனில் நீளும் போரும் குறைந்துவரும் ஆதரவும்

2022-11-27 17:16:51
news-image

வரவு - செலவுத் திட்டம் 2023...

2022-11-27 16:08:24