உலகத்துக்கான பாதுகாப்பு தயாரிப்புகளை உருவாக்குங்கள் - ராஜ்நாத் சிங்

Published By: Vishnu

29 Sep, 2022 | 04:22 PM
image

உலகளாவிய இராணுவச் செலவுகள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், செலவு குறைந்த பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து உலகிற்கு ஆயுதங்களைத் தயாரிக்க உள்நாட்டுத் தொழிலை மேம்படுத்த வலியுறுத்தினார்.

உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியாளர்களின் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா ஒரு கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக உருவெடுத்துள்ளது என்றும், பாதுகாப்புப் பங்குகளின் சமீபத்திய முன்னேற்றம் இத்துறையில் வளர்ந்து வரும் ஆர்வத்தைக் காட்டுகிறது என்றும் கூறினார்.

இந்தியாவில் முதலீடு செய்ய முழு உலகமும் முன்வருகிறது. இந்தியா ஒரு கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாகும். இதுவரை நீங்கள் அனைவரும் கடந்து வந்ததை விட மிக வேகமாக முன்னேற வேண்டிய நேரம் இது என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

தேசிய பாதுகாப்பு நிறுவனங்கள் இந்திய ஆயுதப்படைகளின் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யாமல் சர்வதேச வாடிக்கையாளர்களின் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

உலகளாவிய பாதுகாப்பு செலவினங்களின் அதிகரிப்பு மற்றும் கணிசமான இந்திய மூலதன கொள்முதல் என்பவற்றை குறிப்பிட்ட அவர், தரம் மற்றும் செலவு-செயல்திறன் அடிப்படையில் அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியா திறன் கொண்டது என்றார்.

பாதுகாப்புத் துறையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் எடுத்த பல கொள்கை முன்முயற்சிகளையும் பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

10,000 க்கும் மேற்பட்ட நுண்ணிய, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பாதுகாப்புத் துறையில் இணைந்துள்ளன. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொடக்கங்கள், கண்டுபிடிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அதிகரிப்பு காணப்படுகிறது.

அரசாங்கத்தின் இலக்கு 1.75 இலட்சத்தை எட்டும். 35,000 கோடி ஏற்றுமதி இலக்கு உட்பட 2025-க்குள் ஒரு கோடி மதிப்புள்ள பாதுகாப்பு உற்பத்தி என்பதே ஒரே இலக்காகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08