கஞ்சாவை சட்டபூர்வமாக்குவதால் யாருக்கு இலாபம் ?

By Priyatharshan

29 Sep, 2022 | 12:26 PM
image

கடந்த வருடங்களில் உலகில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவது பற்றி அதிகம் பேசப்பட்டு வருகிறது, ஆனால் அதற்கு உந்து சக்தியாக இருப்பது புகையிலை தொழில் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

கனேடிய கஞ்சா நிறுவனத்தில் பங்குகளை வாங்க பிரிட்டிஷ் அமெரிக்கா புகையிலை நிறுவனம் 126 மில்லியன் முதலீடு செய்துள்ளது. மேலும், உலகின் முன்னணி புகையிலை நிறுவனங்களில் ஒன்றான எல்ட்றியா நிறுவனம், கஞ்சா வணிகத்தைத் தொடங்க டொலர் மில்லியன்கள் 1.8 பில்லியன் முதலீடு செய்துள்ளது.

புகையிலை நிறுவனங்களின் இரகசிய அறிக்கைகளின்படிரூபவ் குறைந்து வரும் “சிகரெட் சந்தைக்கு கஞ்சா (மரிஜுவானா) ஒரு சாத்தியமான மாற்று” என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். 

கஞ்சா பயிரிடுவதற்கு பெரிய நிலப்பரப்பு தங்களிடம் இருப்பதாகவும் அதை பொதியிடுவதற்கு தேவையான இயந்திரங்கள் இருப்பதாகவும் உலகம் முழுவதும் விநியோகிக்கும் திறன் இருப்பதாகவும் புகையிலை தொழில்த்துறையினர் கூறுகிறார்கள்.

உலகின் பல நாடுகளில் கஞ்சா தடை செய்யப்பட்டுள்ளதால் புகையிலை நிறுவனத்தால் கஞ்சா வியாபாரத்தை தொடர முடியவில்லை. எனவே, சர்வதேச அளவில் கஞ்சா வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்காக கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் தந்திரமான முயற்சி நடந்து வருகிறது. 

கஞ்சாவை எமது நாட்டை போன்ற வளரும் நாடுகளில் பயிரிட்டு அந்நியச் செலாவணி ரூடவ்ட்டலாம் என்று கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க முயல்வது அதன் முக்கிய யுக்திகளில் ஒன்றகும்.

எமது நாட்டைப் போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு கஞ்சாவை பயிரிட்டு ஏற்றுமதி செய்வது இலாபகரமானதா ?

உலகில் கஞ்சா வியாபாரத ;தில் இறங்கிய பல நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளன. உலகின் மிகப்பெரிய கஞ்சா வியாபாரிகள் கடந்த ஆண்டுகளில் பல பில்லியன் டொலர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு அவர்களின் வணிகங்களின் மதிப்பு 10 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக சரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உலக கஞ்சா (சணல்) எண்ணெய் விலை 2019 முதல் 75வீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. கஞ்சாவிற்கான கேள்வி குறைவாக இருப்பினும் உற்பத்தி அதிகமாக இருப்பதால், உலகில் கஞ்சா எண்ணெய் பொருட்களின் விலை கடுமையாக சரிந்தது.

அத்துடன் இன்று இலங்கையில் புகையிலை செய்கையை பிரித்தானியா, அமெரிக்கா புகையிலை நிறுவனம் கையகப்படுத்தியது போன்று, இந்த கஞ்சா செய்கையை நாட்டில் நிறுவி அதன் உரிமையை கஞ்சா நிறுவனங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. (தற்போதும் உலகலாவிய ரீதியில், கஞ்சா பயிர்ச்செய்கையை புகையிலை நிறுவனம் விலைக்கு வாங்கி வருகின்றன)

பாதுகாப்புப் படையினரின் தலையீட்டில் கஞ்சாவை பயிரிட்டு ஏற்றுமதி செய்வது எந்தளவு நடைமுறைக்கு சாத்தியமானது?

பாதுகாப்புப் படையினரின் தலையீட்டால் பொதுமக்கள் பாரபட்சமின்றி கஞ்சாவை வளர்த்து ஏற்றுமதி செய்யலாம் என்று கஞ்சா ஊக்குவிப்பாளர்கள் வாதிடுகின்றனர். 

இங்குள்ள நடைமுறைச் சூழல் என்னவென்றால், கஞ்சா ஏற்கனவே வளர்க்கப்பட்டு பாதுகாப்பில் உற்பத்தி செய்யப்படுகின்ற நாடுகளில் சட்டவிரோத கஞ்சா வியாபாரம் அதிகமாகி வருகின்றது. உலக வரலாற்றில் சிகரெட்டுகள் இலவசமாக அல்லது சலுகை விலையில் சிகரெட்டை விளம்பரப்படுத்த பாதுகாப்புப் படையினரால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களும் உள்ளன. சட்டப்பூர்வ தயாரிப்புகளுடன் சட்டவிரோத வணிகங்கள் தோன்றுவது இயல்பானது.

இலங்கையிலும் மதுசாரம் மற்றும் புகையிலை தொடர்பான சட்டவிரோத சந்தைகளை நாம் அனுபவ ரீதியாக காண்கின்றோம். எனவேரூபவ் கஞ்சாவை பாதுகாப்பாக வளர்க்கலாம் மற்றும் ஏற்றுமதி செய்யலாம் என்ற வாதங்கள் நடைமுறைக்கு சாத்தியமற்றது.

கஞ்சாவை ஒளடதமாக பயன்படுத்துவது தொடர்பான உண்மைத்தன்மை

தற்போது மேற்கத்திய மருத்துவத்தில் கஞ்சா, இரண்டு மருந்து வகைகளுக்கு மாத்திரமே பயன்படுத்தப்படுவதுடன் ஒரு வகையை இங்கிலாந்தில் உள்ள NICE 2019 இன் ஒப்புதல் பட்டியலில் இருந்து நீக்கியது. 

கஞ்சா சுதேச மருத்துவத்தில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நீண்ட செயல்முறைக்குப் பிறகு மட்டுமே சுதேச மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் சுதேச மருத்துவ முறையில் கஞ்சா புகைப்பது, கஞ்சா புகையை உட்கொள்வது எந்த வகையிலும் அங்கீகரிக்கப்படவில்லை. மற்றும் சுதேச மருத்துவ முறையில் இது போன்று எந்த முறைமையும் காணப்படவில்லை. 

இது பல நோய்களை ஏற்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கஞ்சா சுதேச மருத்துவத்தில் அதன் நச்சுத்தன்மையை நீக்குவதற்கு பல நுட்ப முறைகள் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாகரூபவ் இது தாவர எண்ணெயில் வறுக்கவும்ரூபவ் கொதிக்கும் நீரில் கொதிக்கவும் செய்து நச்சுத்தன்மை நீக்கப்படுகிறது.

கஞ்சா உபயோகத்தின் உண்மை நிலை

கஞ்சா பயன்பாட்டினால் மனநோய்கள், தற்கொலை மற்றும் தன்னைத்தானே காயப்படுத்துதல் ஆகியவை பொதுவாக ஏற்படும் பிரச்சினைகளாகும். 

கஞ்சா மூளையை எதிர்மறையாக பாதிக்கிறது என்றும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அனைத்து அறிவியல் கோட்பாடுகளாலும் அடிமையாக்கும் தன்மையைக் கொண்டது. கஞ்சா இளம் பருவத்தினருக்கு மாற்ற முடியாத பாதிப்புக்களைஏற்படுத்தும். மேலும், 18 வயதுக்கு முன்பே கஞ்சாவை பயன்படுத்தத் தொடங்கிய இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் விகிதம் அதிகரித்து வருகிறது.

கஞ்சாவை பயன்படுத்திவிட்டு வாகனம் செலுத்துவது விபத்துகளுக்கு முக்கிய காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

ஏற்கனவே சட்டங்கள் தளர்த்தப்பட்ட நாடுகளில் தற்போதைய நிலை

193க்கும் மேற்பட்ட ஐக்கிய நாட்டுச்சபையின் உறுப்புரிமையை பெற்ற நாடுகளில் ஐந்து நாடுகளில் மாத்திரமே (உருகுவே, மெக்சிகோ, ஜோர்ஜியா, தென்னாபிரிக்கா மற்றும் கனடா) கஞ்சா தொடர்பான சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளது. சில மாநிலங்கள் அல்லது மாவட்டங்களில் மாத்திரமே கஞ்சா தொடர்பான சட்டங்கள் தளர்த்தப்பட்டடுள்ள, இத்தகைய சட்டபூர்வமாக்கல் அரசியல் தீர்மானங்களிலே மேற்கொள்ளப்படுகிறது. 

மாறாக விஞ்ஞான ரீதியான முடிவுகள் அல்ல. கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்பட்ட நாடுகளில் தற்போதைய சமூக தாக்கம் மிகப்பெரியது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் கஞ்சா பாவனை அதிகரித்து வருவதாகவும், கஞ்சா பாவனையால் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வியை இடைநிறுத்துவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

பதின்ம வயதினரின் தற்கொலைகள் அதிகரிப்பதற்கு கஞ்சா காரணமாக இருப்பதும் தெரியவந்துள்ளது. கஞ்சாவை சட்டபூர்வமாக்கியுள்ள நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள், கஞ்சா பயன்பாடு அந்நாடுகளில் குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு பங்களித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்த ஆய்வுகள் கஞ்சா பாவனையானது நாட்டின் பணியாளர்களை பலவீனப்படுத்தியுள்ளது என்பதையும் காட்டுகிறது. இந்தப் பின்னணியில், மதகுருமார்கள், அரசியல்வாதிகள், தொழில் வல்லுநர்கள், கலைஞர்கள் மற்றும் ஊடகங்கள் இணைந்து இலங்கையில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் சாதுரியமான முயற்சிகளை தோற்கடிக்க முயற்சிக்க வேண்டும். 

கஞ்சாவை பொருளாதார ஏற்றுமதி பயிரென கூறி, நம் நாட்டைச் சிக்க வைக்கும் பன்னாட்டு புகையிலை நிறுவனங்களின் இந்த முயற்சியை நாம் முறியடிக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளின் பாடசாலைகளுக்கு எதிரே உள்ள கடையில் சிகரெட் விற்பது போல், கஞ்சா விற்கும் முயற்சியின் முதல் படியே இந்த நடவடிக்கை.

மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right