தேசிய சபையில் கலந்துகொள்ளப் போவதில்லை - 7 பாராளுமன்ற உறுப்பினர்கள்அறிவிப்பு

Published By: Digital Desk 3

29 Sep, 2022 | 01:39 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இறந்த தாயின் சடலத்தை நடு வீட்டில் வைத்துக் கொண்டு சூதாட்டம் விளையாடுவதை போன்று அரசாங்கம்  பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்திக் கொண்டு பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது. 

அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசிய சபை வலுவற்றதாகும். ஆகவே பயனற்ற தேசிய சபையில் கலந்துக்கொள்ள போவதில்லை என மேலவை இலங்கை கூட்டணியின் 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான மேலவை இலங்கை கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள கடித்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசியல் கட்சிகள் அனைத்தும் பொது கொள்கையின் அடிப்படையில் இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டும் என்பதை ஆரம்பத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறோம்.

சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க முன்னர் தேசிய சபை ஒன்றை ஸ்தாபித்து அதனூடாக சர்வக்கட்சி அரசாங்கத்தின் நிர்வாக கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் கடந்த ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி முன்வைத்தோம்.

முன்னாள் ஜனாதிபதிக்கும், தற்போதைய ஜனாதிபதிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியாமல் போயுள்ளது.

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதை விடுத்து அரசாங்கம் பொருப்பற்ற வகையில் செயற்படுகிறது. பொருளாதார நெருக்கடி மனித வள அனர்த்தமாக வியாபித்துள்ளமை அவதானத்துக்குரியது.

தவறுகளை திருத்திக்கொள்ளுமாறு பலமுறை எடுத்துரைத்தும் அதனை அரசாங்கம் பொருட்படுத்தவில்லை.சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும் பல யோசனைகளை முன்வைத்தோம்.

பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் பொறுப்புடன் செயற்படாத காரணத்தினால் சமூகத்தின் மத்தியில் காணப்படும் பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைந்து செல்கிறது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நடைமுறைக்கு சாத்தியமான திட்டங்களை செயற்படுத்தவில்லை.

இறந்த தாயின் சடலத்தை நடு வீட்டில் வைத்துக் கொண்டு சூதாட்டம் விளையாடுவதை போன்று அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது.

அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசிய சபை அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையின் பிறிதொரு வெளிப்பாடாக உள்ளது.பெயரளவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசிய சபைக்கு மேலவை இலங்கை கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்துக்கொள்ள போவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24