இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப பல வருடங்களோ, பல தசாப்தங்களோ, பல சந்ததிகளோ ஆகலாம் - நெதர்லாந்து தூதுவர்

By Vishnu

29 Sep, 2022 | 01:38 PM
image

(நா.தனுஜா)
நல்லிணக்கப்பொறிமுறைக்கு ஏதுவான பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குவதுடன் அதற்குத் தலைமைதாங்கவேண்டிய முக்கிய கடமை மத்திய அரசாங்கத்திற்கு இருக்கின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் போனி ஒபார்க், நீண்டகாலமாகப் போர் நிலவிய இலங்கை போன்றதொரு நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதென்பது மிகவும் சவாலானதொரு விடயம்.

இங்கு பரஸ்பர நம்பிக்கை, புரிந்துணர்வு மற்றும் மரியாதை ஆகியவற்றுடன்கூடிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படுவதற்கு பல வருடங்களோ அல்லது பல தசாப்தங்களோ அல்லது பல சந்ததிகளோ ஆகலாம் என்றும் தெரிவித்துள்ளார். 

தெற்காசிய கொள்கை மற்றும் ஆராய்ச்சிக்கான நிறுவனமானது நெதர்லாந்து தூதரகத்தின் அனுசரணையுடன் 'பெண் கவுன்சிலர்கள் மூலம் நல்லிணக்கம்' என்ற செயற்திட்டத்தை கடந்த 2021 அக்டோபர் மாதம் ஆரம்பித்தது.

உள்ளுராட்சி மன்றங்களில் இயங்குநிலையிலுள்ள பெண் அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பங்குபற்றுதலுடன் அடிமட்டத்திலிருந்து இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இச்செயற்திட்டத்தின் வருடாந்தப்பூர்த்தியை முன்னிட்டு 28 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்நிகழ்வில் கலந்துகொண்டு விசேட உரையாற்றுகையிலேயே நெதர்லாந்து தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: 

'பெண் கவுன்சிலர்கள் மூலம் நல்லிணக்கம்' என்ற செயற்திட்டத்தின் ஊடாக இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதிலும் அதனை பெண்களின் தலைமைத்துவம், திறன்களை வலுவூட்டுவதன் மூலம் முன்னெடுப்பதிலும் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளமையானது என்னை மிகவும் கவர்ந்தது.

பெண்களை வலுவூட்டல் மற்றும் பாலின சமத்துவம் ஆகிய விடயங்களில் நெதர்லாந்து மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றிவருவதை நீங்கள் அறிவீர்கள். இவ்வாறானதொரு பின்னணியில் பெண் தலைமைத்துவம் மற்றும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கான அவர்களின் இயலுமை ஆகிய விடயங்களைப் பொறுத்தமட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றார்.

முதலில் தனது தந்தையையும் பின்னர் தனது கணவரையும் இழந்து, மிகமோசமான தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் இருந்து மீண்டபோதிலும், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கொண்டிருந்த உறுதிப்பாடும் அர்ப்பணிப்பான தன்மையும் மாற்றமடையவில்லை. 

1960களின் ஆரம்பம்வரை நெதர்லாந்தில் திருமணமான பெண்கள் தமது தொழிலை இராஜினாமா செய்வதுடன், வீட்டுவேலைகளைப் பொறுப்பாகக் கவனித்துக்கொள்ளவேண்டும்.

இருப்பினும் இப்போது அந்த உலகம் மாறிவிட்டது. அந்த மாற்றம் ஆரோக்கியமானதாகக் காணப்படுவதுடன் இன்னமும் மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. இருப்பினும் நாம் அதன் உச்சபட்ச எல்லையை இன்னமும் அடையவில்லை. ஆண்களைப்போன்று பெண்களுக்கும் சமளவான வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதை நாம் தொடர்ந்து உறுதிசெய்யவேண்டும்.

பெண்கள் எப்போதும் தமது சமூகத்திற்கு முதலிடம் வழங்குபவர்களாகவும் சமாதானம், நல்லிணக்கம், விட்டுக்கொடுப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் குணவியல்புகளைக் கொண்டவர்களாகவும் இருக்கின்றார்கள். 

நீண்டகாலமாகப் போர் நிலவிய இலங்கை போன்றதொரு நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதென்பது மேலும் சவாலானதொரு விடயமாகும். அங்கு பரஸ்பர நம்பிக்கை, புரிந்துணர்வு மற்றும் மரியாதை ஆகியவற்றுடன்கூடிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படுவதற்கு பல வருடங்களோ அல்லது பல தசாப்தங்களோ அல்லது பல சந்ததிகளோ ஆகலாம்.

அதற்கு கால அவகாசமும் வளங்களும் அர்ப்பணிப்பான தன்மையும் இன்றியமையாதனவாகும். அதுமாத்திரமன்றி அதற்கு சமூகத்திலுள்ள அனைத்துத் தரப்பினரும் தைரியமாக அடியெடுத்துவைக்கவேண்டியது அவசியமாகும். அந்தவகையில் இங்குள்ள அனைத்துப் பெண்களும் அந்த அடியை எடுத்துவைத்திருக்கின்றார்கள். 

போரின் விளைவாக இனங்களுக்கிடையில் பிரிவினைவாதம் மிக ஆழமாக வேரூன்றியிருக்கும் இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு அனைத்துத்தரப்பினரும் உண்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் ஒன்றிணையவேண்டியது அவசியமாகும்.

இந்த நல்லிணக்கப்பொறிமுறைக்கு ஏதுவான பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குவதுடன் அதற்குத் தலைமைதாங்கவேண்டிய முக்கிய கடமை மத்திய அரசாங்கத்திற்கு இருக்கின்றது என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அதேவேளை இவ்விடயத்தில் எமக்குள்ள கடமையை நாம் உரியவாறு நிறைவேற்றவேண்டும். 

மேலும் எந்தவொரு நாட்டிலும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு சமூகங்களுக்கு இடையிலான நம்பிக்கை என்பது இன்றியமையாததொரு காரணியாகும். இருப்பினும் தற்போது அது போதுமானதாக இல்லை.

தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு அதுவும் அடிப்படைக்காரணமாக இருக்கக்கூடும். ஆனால் தெற்காசிய கொள்கை மற்றும் ஆராய்ச்சிக்கான நிறுவனத்தின் செயற்திட்டம் மூலம் மீண்டும் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்து சமுத்திர கடலுக்கடியிலான இணைய கேபிள்...

2022-12-09 15:05:51
news-image

வவுனியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 9...

2022-12-09 15:24:41
news-image

நுகேகொடையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த...

2022-12-09 13:39:36
news-image

உடுகம பிரதேசத்தில் ஒருவர் தாக்கப்பட்டுக் கொலை!

2022-12-09 13:40:31
news-image

இளம்பெற்றோர் போதைப்பொருளிற்கு அடிமையாவது அதிகரிப்பு -...

2022-12-09 13:19:21
news-image

கிளிநொச்சியில் பல கிராமங்களில் 165 க்கும்...

2022-12-09 14:34:19
news-image

வவுனியாவை சேர்ந்தவர் கொழும்பில் 3 ஆவது...

2022-12-09 13:33:48
news-image

ரி - 56 ரக துப்பாக்கியின்...

2022-12-09 13:22:54
news-image

வடக்கு மக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை...

2022-12-09 12:58:15
news-image

சார்ஜன்டின் மனைவியான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்...

2022-12-09 12:24:27
news-image

காற்று மாசடைவது குறித்து யாழ் மக்களுக்கு...

2022-12-09 12:07:04
news-image

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள்...

2022-12-09 11:56:50