நாடாளுமன்றத்தை கைப்பற்ற இரகசிய திட்டம் தீட்டிய அரசியல்வாதிகள் - பொலிஸார் தீவிர விசாரணை

By Rajeeban

29 Sep, 2022 | 11:23 AM
image

அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகளில் ஈடுபடுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களை ஊக்குவித்த சில அரசியல்வாதிகள் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவிவிலகியதன் பின்னர் நாடாளுமன்றத்தை ஆக்கிரமிக்குமாறும் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பை தடுக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்களை கேட்டுக்கொண்ட சில அரசியல்வாதிகள் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 குறிப்பிட்ட சில தரப்பினருடன் இந்த அரசியல்வாதிகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டமை குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வாபஸ் பெறலாம் என்ற தகவல்களிற்கு மத்தியில் உயர் பாதுகாப்பு வலயங்கள் ஏன் அவசியம் ஏன் அவற்றைபாதுகாக்கவேண்டும் என்பது குறித்துஉயர்நீதிமன்றத்திற்கு அரசாங்கம்  தெளிவுபடுத்தவுள்ளது.

ஜூலை 9 ம் திகதிக்கு பின்னர் இரண்டாம் கட்டம் குறித்து விசாரணையாளர்களிற்கு கிடைத்த தகவல்கள் குறித்து அரசாங்கம்  உயர் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கவுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் போல செயற்பட்டு குழுவொன்று நாடாளுமன்றத்தை சுற்றிவளைத்து நாடாளுமன்றத்தை கைபற்ற திட்டமிட்டிருந்தது- புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான  வாக்கெடுப்பை தடுப்பதே இதன் நோக்கம் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக  தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த குழுவினர் உயர்நீதிமன்றத்தையும் சுற்றிவளைக்க திட்டமிட்டனர் என  தெரிவித்துள்ள விசாரணையாளர்கள் இதனடிப்படையிலேயே கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்களை ஏற்படுத்தப்பட்டது எனவும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 9...

2022-12-09 14:23:17
news-image

நுகேகொடையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த...

2022-12-09 13:39:36
news-image

உடுகம பிரதேசத்தில் ஒருவர் தாக்கப்பட்டுக் கொலை!

2022-12-09 13:40:31
news-image

இளம்பெற்றோர் போதைப்பொருளிற்கு அடிமையாவது அதிகரிப்பு -...

2022-12-09 13:19:21
news-image

கிளிநொச்சியில் பல கிராமங்களில் 165 க்கும்...

2022-12-09 14:34:19
news-image

வவுனியாவை சேர்ந்தவர் கொழும்பில் 3 ஆவது...

2022-12-09 13:33:48
news-image

ரி - 56 ரக துப்பாக்கியின்...

2022-12-09 13:22:54
news-image

வடக்கு மக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை...

2022-12-09 12:58:15
news-image

சார்ஜன்டின் மனைவியான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்...

2022-12-09 12:24:27
news-image

காற்று மாசடைவது குறித்து யாழ் மக்களுக்கு...

2022-12-09 12:07:04
news-image

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள்...

2022-12-09 11:56:50
news-image

விகாரையில் ஒப்படைக்கப்பட்ட சிறுவன் மர்மமான முறையில்...

2022-12-09 11:55:41