கொழும்பில் திபப்பரே கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி இன்று ஆரம்பம்

By Vishnu

29 Sep, 2022 | 01:37 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட விளையாட்டில் முன்னிலையில் இருக்கும் பிரபல பாடசாலைகள் பங்குபற்றும் 20 வயதுக்குட்பட்ட திபப்பரே கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி கொழும்பில் இன்று (29) வியாழக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ள 2 போட்டிகளுடன் ஆரம்பமாகவுள்ளது.

மருதானை புனித சூசையப்பர் கல்லூரிக்கும் கண்டி கிங்ஸ்வூட் கல்லூரிக்கும் இடையிலான போட்டி மொரகஸ்முல்லை மைதானத்திலும் கொழும்பு ஹமீட் அல் ஹுசெய்னி கல்லூரிக்கும் கந்தானை டி மெஸிநோட் கல்லூரிக்கும் இடையிலான போட்டி சிட்டி லீக் மைதானத்திலும் நடைபெறவுள்ளன. இந்த இரண்டு போட்டிகளும் வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த சுற்றுப் போட்டியில் வட பகுதியிலிருந்து யாழ். மத்திய கல்லூரி, யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி, இளவாழை புனித ஹென்றியரசர் கல்லூரி ஆகியன பங்குபற்றுகின்றமை விசேட அம்சமாகும்.

கொவிட் - 19 தொற்று நோய் தாக்கம் காரணமாக 2020, 2021களில் கைவிடப்பட்டிருந்த இந்த கால்பந்தாட்டப் போட்டியில் இந்த வருடம் 20 பாடசாலை அணிகள் பங்குபற்றுகின்றன.

நாடு முழுவதும் இலைமறை காய்களாக இருக்கும் இளம் கால்பந்தாட்ட வீரர்களை இனங்காண்பதையும் இளம் வீரர்கள் மத்தியில் கால்பந்தாடட விளையாட்டை ஊக்குவிப்பதையும் குறிக்கோளாகக் கொண்டு திபப்பரே.கொம் இந்த சுற்றப் போட்டியை 2018இல் முதல் தடவையாக நடத்தியது. 2019இல் இப் போட்டியின் அத்தியாயம் நடத்தப்பட்ட போதிலும் கொவிட் - 19 காரணமாக இடைநிறுத்தப்பட்டு 2020ஆண்டு ஆரம்பத்தில் இறுதிப் போட்டியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

அந்த இறுதிப் போட்டியில் பம்பலப்பிட்டி புனித பேதுருவானவர் கல்லூரியை வெற்றிகொண்டு சம்பியனான ஸாஹிரா கல்லூரி இம்முறை நடப்பு சம்பியனாக பங்குபற்றுகிறது.

3 வருடங்களின் பின்னர் இந்த விறுவிறுப்பான கால்பந்தாட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதன் மூலம் அவ் விளையாட்டின் மீதான ஆர்வம் மேலும் அதிகரிக்கும் என போட்டியை முன்னின்று நடத்தும் திபப்பரே.கொம் நம்புகிறது.

இந்த சுற்றுப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் சில போட்டிகளுடன் கால் இறுதிகளிலிருந்து இறுதிப் போட்டி வரை சகல போட்டிகளையும் திபப்பரே.கொம் நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது.

பங்குபற்றும் அணிகள்

ஏ குழு: மருதானை ஸாஹிரா கல்லூரி, யாழ். மத்திய கல்லூரி, மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரி, கட்டுனேரிய புனித செபஸ்தியார் கல்லூரி, களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி

பி குழு: பம்பலப்பிட்டி புனித பேதுருவானவர் கல்லூரி,  கொழும்பு  அல் அக்சா கல்லூரி, நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ற் கல்லூரி, பதுளை தர்மதூத்த கல்லூரி.

சி குழு: மருதானை புனித சூசையப்பர் கல்லூரி, கந்தானை டி மெஸிநோட் கல்லூரி, கொழும்பு றோயல் கல்லூரி, கொழும்பு ஹமீத் அல் ஹுசெய்னி கல்லூரி, கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி.

டி குழு: யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி, இளவாழை புனித ஹென்றியரசர் கல்லூரி, கொழும்பு கேடவே கல்லூரி, கம்பளை ஸாஹிரா கல்லூரி, கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரேஸில் - குரோஷியா போட்டியுடன் உலகக்...

2022-12-09 10:18:00
news-image

கலம்போ ஸ்டார்ஸுக்கு முதலாவது வெற்றி :...

2022-12-09 07:40:15
news-image

ஸ்பெய்ன் கால்பந்து அணியின் பயிற்றுநர் நீக்கப்பட்டார்:...

2022-12-08 18:28:45
news-image

தொடர்ச்சியாக 3 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சதம்...

2022-12-08 17:43:11
news-image

ரசிகர்களின் கோஷங்களால் குரோஷியாவுக்கு பீபா 1.94...

2022-12-08 16:12:46
news-image

வரலாறு படைத்தது வத்தளை லைசியம்; நந்துன்,...

2022-12-08 16:14:19
news-image

நான்கு பற்களை இழந்தார் சாமிக நேற்றைய...

2022-12-08 10:46:41
news-image

க்ளடியேட்டர்ஸ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்த ப்றத்வெய்ட்,...

2022-12-08 10:09:41
news-image

மெஹிதி ஹசன் மிராசின் சகலதுறை ஆட்டத்தால்...

2022-12-07 21:48:33
news-image

தீக்ஷன, வியாஸ்காந்த், சதீர, அவிஷ்க அபாரம்...

2022-12-07 21:42:13
news-image

நியூ ஸிலாந்து றக்பி தலைவராக முதல்...

2022-12-07 13:11:52
news-image

ரமொஸின் ஹெட்-ரிக் கோல்களின் உதவியுடன் கால்...

2022-12-07 10:24:18