இங்கிலாந்தை 6 ஓட்டங்களால் வெற்றிகொண்டது பாகிஸ்தான்

By Vishnu

29 Sep, 2022 | 11:10 AM
image

(என்.வீ.ஏ.)

இங்கிலாந்துக்கு எதிராக லாகூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற 5 ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியுடன் 7 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் 3 - 2 என்ற ஆட்டங்கள் கணக்கில் பாகிஸ்தான் முன்னிலை அடைந்துள்ளது.

மொஹமத் ரிஸ்வான் குவித்த அரைச் சதம் இந்த வெற்றிக்கு வழிவகுத்தது.

7 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 4 போட்டிகள் நிறைவில் இரண்டு அணிகளும் தலா 2 வெற்றிகளை ஈட்டி தொடர் சமப்படுத்தப்பட்டிருந்ததால் இந்தப் போட்டி பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இரண்டு அணிகளுமே துடுப்பாட்டத்தில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டன.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் கடும் சிரமத்துக்கு மத்தியில் மொஹமத் ரிஸ்வான் குவித்த அரைச் சதத்தின் உதவியுடன் 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றது.

ஒரு பக்கத்தில் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்துகொண்டிருக்க மறு பக்கத்தில் ரிஸ்வான் திறயைமாக துடுப்பெடுத்தாடி அணியைப் பலப்படுத்திக்கொண்டிருந்தார்.

அணித் தலைவர் பாபர் அஸாம் (9), ஷான் மசூத் (7), ஹைதர் அலி (4), இப்திகார் அஹ்மத் (15), அசிவ் அலி (5), மொஹமத் நவாஸ் (0), ஷதாப் கான் (7), ஆமிர் ஜமால் (10), ஹாரிஸ் ரவூப் (5) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.

எனினும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ரிஸ்வான் 46 பந்துகளில் 3 சிக்கஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 63 ஓட்டங்களைப் பெற்றார். இந்த வருடம் 12 போட்டிகளில் ரிஸ்வான் பெற்ற 7ஆவது அரைச் சதம் இதுவாகும். இந்த 7 அரைச் சதங்களும் 26 நாட்களுக்குள் பெறப்பட்டுள்ளது விடேச அம்சமாகும்.

மொஹமத் வசீம் 8 ஓட்டங்களுடன் ஆட்டமமிழக்காதிருந்தார்.

இங்கிலாந்து பந்துவீச்சில் மார்க் வூட் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டேவிட் வில்லி, சாம் கரன் ஆகிய இருவரும் தலா 23 ஓட்டங்களுக்கு தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

பாகிதானினால் நிர்ணயிக்கப்பட்ட 146 ஓட்டங்களை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 15ஆவது ஓவரில் 6ஆவது விக்கெட்டை இழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 85 ஓட்டங்களாக இருந்தது.

ஆரம்ப வீரர்களான பில் சோல்ட் (3), அலெக்ஸ் ஹேல்ஸ் (1) ஆகிய இருவரும் ஆட்டமிழந்த பின்னர் டேவிட் மாலன் (36), பென் டக்கெட் (10) ஆகிய இருவரும் அணியை மீட்டெடுக்க முயற்சித்தனர்.

ஆனால் பென் டக்கெட்டும் அவரைத் தொடர்ந்து ஹெரி ப்றூக்கும் (4) ஆட்டமிழக்க இங்கிலாந்து மீண்டும் தடுமாற்றம் அடைந்தது.

மொத்த எண்ணிக்கை 62 ஓட்டங்களாக இருந்தபோது டேவிட் மாலனும் மேலும் 17 ஓட்டங்கள் சேர்ந்தபோது சாம் கரனும் (17) ஆட்டம் இழக்க இங்கிலாந்து மோசமான நிலையை அடைந்தது.

எனினும் அணித் தலைவர் மொயீன் அலியும் க்றிஸ் வோக்ஸும் 7ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 131 ஓட்டங்களாக உயர்த்தினர். அப்போது 10 ஓட்டங்களைப் பெற்றிருந்த க்றிஸ் வோக்ஸ் ஆட்டமிழந்தார்.

இந் நிலையில் இங்கிலாந்தின் வெற்றிக்கு கடைசி ஓவரில் மேலும் 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை கட்டுப்பாட்டுடன் வீசிய ஆமிர் ஜமால் 8 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து பாகிஸ்தானின் வெற்றியை உறுதிசெய்தார்.

மொயீன் அலி 4 சிக்ஸ்கள், 2 பவுண்ட்றிகள் அடங்கலாக 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹாரிஸ் ரவூப் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரேஸில் - குரோஷியா போட்டியுடன் உலகக்...

2022-12-09 10:18:00
news-image

கலம்போ ஸ்டார்ஸுக்கு முதலாவது வெற்றி :...

2022-12-09 07:40:15
news-image

ஸ்பெய்ன் கால்பந்து அணியின் பயிற்றுநர் நீக்கப்பட்டார்:...

2022-12-08 18:28:45
news-image

தொடர்ச்சியாக 3 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சதம்...

2022-12-08 17:43:11
news-image

ரசிகர்களின் கோஷங்களால் குரோஷியாவுக்கு பீபா 1.94...

2022-12-08 16:12:46
news-image

வரலாறு படைத்தது வத்தளை லைசியம்; நந்துன்,...

2022-12-08 16:14:19
news-image

நான்கு பற்களை இழந்தார் சாமிக நேற்றைய...

2022-12-08 10:46:41
news-image

க்ளடியேட்டர்ஸ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்த ப்றத்வெய்ட்,...

2022-12-08 10:09:41
news-image

மெஹிதி ஹசன் மிராசின் சகலதுறை ஆட்டத்தால்...

2022-12-07 21:48:33
news-image

தீக்ஷன, வியாஸ்காந்த், சதீர, அவிஷ்க அபாரம்...

2022-12-07 21:42:13
news-image

நியூ ஸிலாந்து றக்பி தலைவராக முதல்...

2022-12-07 13:11:52
news-image

ரமொஸின் ஹெட்-ரிக் கோல்களின் உதவியுடன் கால்...

2022-12-07 10:24:18