''இம்பூரல்" - ,மருத்துவ குணங்கள் !

By Devika

29 Sep, 2022 | 10:59 AM
image

முழுத் தாவரமும் இரத்தப் பெருக்கை கட்டுப்படுத்தும். பித்த நீரைப் பெருக்கும். வயிற்று இரைச்சல், விக்கல் போன்றவற்றை கட்டுப்படுத்தும்.

வெண்மையான, சிறிய மலர்களையும் அகலத்தில் குறுகிய, ஈட்டி வடிவமான இலைகளையும் கொண்ட குறுஞ்செடி. முழுத் தாவரமும் மருத்துவப் பயன்கொண்டது. இன்புறா, சிறுவேர், சாயவேர் ஆகிய மாற்றுப் பெயர்களும் வழக்கத்தில் உள்ளன.

மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கு மற்றும் இரத்த வாந்தி கட்டுபட பசுமையான இம்பூரல்ச் செடியை நன்கு கழுவி கைப்பிடியளவு எடுத்து, நீர் விட்டு விழுதாக அரைத்து 10 கிராம் அளவு 200 மி.லி பாலில் கலந்து குடித்து வரவேண்டும். தினமும் இரு வேளைகள் இவ்வாறு செய்ய வேண்டும்.

இம்பூரலின் வேரைக் குடிநீராக்கி குடிக்க, வாயிலிருந்து இரத்தம் வடிதல் நிற்கும். 

இருமல் கட்டுபட இம்பூரல், வல்லாரை வகைக்கு 40கிராம் நசுக்கி ½ லீட்டர் நீரில் போட்டு 150மி.லி ஆகக் காய்ச்சி 2 தேக்கரண்டி வீதம் காலை, மாலை வேளைகளில் குடித்து வரவேண்டும்.

மார்பு எரிச்சல் குணமாக இம்பூரல் இலைச்சாற்றை சம அளவு பாலுடன் கலந்து சிறிதளவு சீனி சேர்த்து சாப்பிட்டு வரவேண்டும்.

சளி கட்டுபட வேரை நிழலில் உலர்த்தி, தூள் செய்து 2 தேக்­கரண்டி அளவு தூளைச் சிறிதளவு அரிசி மாவுடன் கலந்து, அடை­யாகத் தட்டிச் சாப்பிட்டு வர வேண்டும்.

உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல் தீர இம்பூரல் இலைச்­சாற்றை எரிச்சல் உள்ள இடங்களில் தடவி வரவேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குழந்தையின் நாக்கை சுத்தம் செய்யும்போது...

2022-12-02 10:55:30
news-image

துளசி க்ரீன் டீ குடிப்பதால் கிடைக்கும்...

2022-11-30 16:11:43
news-image

தனியாக உணவு உட்கொண்டால் இதயக்கோளாறு நிச்சயமாம்...

2022-11-30 16:26:14
news-image

க்ளா ஹேண்ட் எனப்படும் சுண்டு விரல்...

2022-11-30 13:49:13
news-image

தாய்ப்பால் சுரப்பை பாதிக்கும் மன அழுத்தம்

2022-11-30 15:59:38
news-image

சீனிக்கு பதிலாக தேனா?

2022-11-30 16:21:16
news-image

ஒரு நாளைக்கு 2 லீற்றர் தண்ணீர்...

2022-11-30 10:30:45
news-image

குருதிநெல்லியின் மருத்துவ குணங்கள்

2022-11-27 12:03:46
news-image

வேதிப்பொருட்களால் அதிகம் பாதிக்கப்படும் குழந்தைகள்

2022-11-25 13:17:56
news-image

ரைனிட்டிஸ் மெடிகமென்டோசா எனும் மூக்கடைப்பு பாதிப்பிற்கான...

2022-11-25 10:44:45
news-image

குழந்தை வயிற்று வலியால் அழுகிறதா?

2022-11-24 17:29:31
news-image

மலச்சிக்கலா ? அலட்சியம் காட்டினால் மூலநோய்...

2022-11-24 12:39:37