உயிர் வாழ்வதற்கு முக்கியமான உடல் உறுப்புகளில் ஒன்றாக இதயம் விளங்குகிறது. உயிர் பிரியும் கடைசி நொடி வரை இதயம் துடித்துக்கொண்டிருக்கும்.
இதயம் செயலிழந்து போனாலோ, மாரடைப்பு ஏற்பட்டாலோ மரணம் ஆட்கொண்டுவிடும். ஒட்சிசன் நிறைந்திருக்கும் இரத்தத்தை உடல் முழுவதும் கடத்திச் செல்வதுதான் இதயத்தின் முக்கியமான வேலையாகும். இதயம் பற்றிய மேலும் சில சுவாரசியமான உண்மைகளை தெரிந்து கொள்வோம்.
* கைவிரல்களை உள்ளங்கைக்குள் மடக்கி வைக்கும் அளவுக்குத்தான் ஒருவரின் இதயம் அமைந்திருக்கும்.
* இதயம் தினமும் 1 லட்சத்து 15 ஆயிரம் முறை துடிக்கும்.
* இதயம் ஒவ்வொரு நாளும் சுமார் 7 ஆயிரத்து 570 லீட்டர் இரத்தத்தை ‘பம்ப்’ செய்யும்.
* உடலில் இருந்து துண்டிக்கப்பட்டாலும் இதயம் துடித்துக்கொண்டிருக்கும் தன்மை கொண்டது.
* ‘ஓப்பன் ஹார்ட் சர்ஜரி’ எனப்படும் இதய அறுவை சிகிச்சை முதன் முதலில் 1893ஆம் ஆண்டு நடந்தது.
* 3,500 ஆண்டுகள் பழமையான எகிப்திய மம்மியில் இதய நோய் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
* பாலூட்டி இனங்களில் திமிங்கலம் மிகப் பெரிய இதயத்தை கொண்டுள்ளது.
* மனித இதயத்தின் எடை ஒரு பவுண்டுக்கும் (450 கிராம்) குறைவானது. இருப்பினும் ஆணின் இதயம், பெண்ணின் இதயத்தை விட சுமார் 50 கிராம் எடை கூடுதலாக இருக்கும்.
* கண்ணின் விழித்திரை (கார்னியா) தவிர உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் இதயத்தில் இருந்து இரத்தத்தை பெறுகின்றன.
* இதயத்தின் வால்வுகள் திறக்கும்போதும் மூடும்போதும் ‘லப் டப்’ என்னும் சத்தம் ஏற்படுகிறது.
* இரத்த நாள அமைப்பு மெல்லிய இழைகளால் ஆனது. அதனை நீட்டித்தால் சுமார் 60 ஆயிரம் மைல்களுக்கு மேல் நீளும்.
* இதய புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் அரிதானது.
* புன்னகைப்பது இதயத்துக்கு நல்லது. வாய் விட்டு சிரிப்பது மன அழுத்தத்தை குறைக்க உதவும். நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM