குழந்தையின் கண்ணில் மை வைக்கலாமா...

Published By: Devika

29 Sep, 2022 | 10:54 AM
image

பிறந்த குழந்­தையே ரோஜாப்பூ போன்று அழகாய் இருக்கும்போது அதை மேலும் அழகுப்படுத்தும் விதமாக கண் மையால் அழகுப்படுத்தும் அம்­மாக்­­கள் அதிகம்.

பாரம்பரியமாக குழந்­தைக்கு கருப்பு பொட்டு வைப்பது திருஷ்டி­­யைக் கழிக்கும் என்று சொல்லிக் கொள்கிறோம். முந்தைய தலை­முறையினர் குழந்தைக்கு தேவை­யானவற்றைக் கூடு­மான வரை அவர்­களா­கவே தயா­ரித்து பயன்படுத்தி­னார்கள்.

பருத்தி துணியில் செய்யப்படும் லங்கோட்டாக்கள், உரை மருந்து­கள், மசாஜ் செய்ய செக்கில் ஆட்டிய எண்ணெய்கள் இவற்றுக்கு மத்தியில் கண்ணுக்கு வைக்கக்கூடிய கண் மைகளையும் தயாரித்தார்கள்.

குட்டிக் கண்களுக்கு மையிட்டு கண்களை இன்னும் அழகாக காட்டுவதற்கு மை இட்டாலும் திருஷ்டி கழியவே கண் மை என்று சொல்­வார்­கள்.


தற்போது எல்லாமே மாறி­விட்டது. கடைகளில் விற்கப்படும் கண் மையில் அதிக அளவு லெட் இருப்ப­தால் குழந்தையின் கண்களிலும், எலும்பு, மூளை பகுதியிலும் பாதிப்பு ஏற்படுத்து­கிறது.

கண் மை தயாரிக்கப் பயன்படும் பொருள்களில் இரசாயனத் தன்மை கலந்திருப்பதால் சில குழந்தைகளுக்கு கண் மை அரிப்பு, கண்களில் நீர் வடிதல், கண்ணில் அலர்ஜி போன்றவை உண்டா­கும் வாய்ப்புண்டு.

மேலும் விரல் இடுக்குகளில் இருக்கும் தூசு, அழுக்கு போன்றவற்றாலும் தொற்றுப் பரவ நேரிட­லாம் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தப்படும் கண் மை எவ்வித பாதிப்பையும் உண்­டாக்காது. அதைத் தயாரிப்பதும் எளி­தானதே.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right