இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான  இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 405 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய சகல விக்கட்டுகளையும் இழந்து 204 ஒட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டுள்ளது.

இந்திய அணி சார்பில் அணித்தலைவர் விராட் கோஹ்லி 81 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் அடில் ரிஷாட் மற்றும் ஸ்டுவர்ட் போர்ட் தலா 4 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இங்கிலாந்து அணி விக்கட்டிழப்பின்றி 7 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 455 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், இங்கிலாந்து அணி 255 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.