வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு சர்வதேச தகவல் அறியும் தினமான இன்று பொது அதிகாரசபைகளுக்கு அழைப்பு 

28 Sep, 2022 | 09:55 PM
image

 

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கன் குறிப்பிடுகையில்  “பொதுமக்கள் தகவல்களை அறிந்துகொள்ள இடமளிக்கும் போது நாடு பாதுகாப்பானதாகவிருக்கும்” என குறிப்பிட்டார். 

இக்கருத்தானது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு தகவல் அணுகலானது எவ்வளவு முக்கியத்துவமானது என்பதை குறிக்கின்றது. 

சர்வதேச தகவல் அறியும் தினமானது தகவல் அணுகல் தொடர்பான சர்வதேச உரையாடலை உருவாக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது.

 பின்னர் ஐக்கிய நாடுகள் சபையானது செப்டம்பர் மாதம் 28ம் திகதியினை உலகளாவிய தகவல் அணுகலுக்கான சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தியது. 

சர்வதேச தகவல் அறியும் தினத்தை அனுஷ்டிக்கும் இவ்வேளையில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனமானது ஊழலுக்கு எதிரான கூட்டு முயற்சியில் தனது 20 ஆவது ஆண்டை இலங்கையில் பூர்த்தி செய்கிறது. 

அதேபோல் இலங்கையில் தனது செயற்பாட்டினை ஆரம்பித்த காலம் முதல் தகவல் அறியும் உரிமையை உறுதி செய்வதற்கும் அதனை பாதுகாப்பதற்கும் முயற்சிக்கும் அதேவேளை பிரஜைகளின் RTI பயணத்தில் தொடர்ந்தும் பங்களித்து அவர்களுடன் பயணிக்கிறது. 

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தகவல் அறியும் உரிமையானது மிகவும் வலிமைமிக்க கருவியாகும், பொது அதிகாரசபைகள் மீது இந்த தகவல் அறியும் உரிமையானது கடமையொன்றாக  பிரதிபலித்து  ஓர் கட்டாய சட்ட பொறிமுறையூடாக நாட்டின் பிரஜைகளுக்கு பொறுப்புக்கூற மற்றும் கடமைகளை உணர்ந்து செயற்படக்கூடியவர்களாகவும் காணப்படுகின்றன. 

சர்வதேச தகவல் அறியும் தினமானது வெறுமனே அனுஷ்டிப்பதற்கான நாள் அல்ல, மாறாக உரிமை தொடர்பில் ஆழமான மற்றும் பரந்த அறிவினை அல்லது விளக்கத்தினை உருவாக்குவதற்கான ஓர் தருணமாகும். 

மேலும் பிரஜைகளின் இறையாண்மை உரிமைக்காக பொது அதிகாரிகள் உண்மையிலேயே தமது வேலையினை செய்கிறார்களா என்பதை பற்றி அவர்கள் சிந்திக்கத் தூண்டும் ஒரு தருணமாகும். 

உலகிலுள்ள நாடுகள் அனைத்தும் அவர்களது அரசியலமைப்பின் விதிமுறைகள் மூலமாக இந்த சட்டபூர்வ உரிமையை பெற்றுள்ளார்கள் மற்றும் பல்வேறு மட்ட அளவீடுகளில் பொது அதிகாரசபைகள் மீது இவை கடமையாகின்றது. 

அமைச்சுக்கள், அரச திணைக்களங்கள், பொது நிறுவனங்கள், உள்ளுராட்சி மன்றங்கள், மாகாண சபைகளினால் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், உயர்கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து நீதிமன்றங்கள், நியாய சபைகள் மற்றும் நீதிச் சேவைக்காக உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் என்பன இலங்கையின் "பொது அதிகாரசபைகள்" எனும் பதத்தினுள் உள்ளடங்குகிறது. பொதுமக்களுக்கு தகவல்களை வினைத்திறனாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் வழங்குவதற்கு மேற் குறிப்பிட்ட அதிகார சபைகள் மீது இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டமானது கடமைப்பட்டுள்ளது. 

சட்ட ஏற்பாடுகளுக்கு இணங்குவதனூடாக இந்த அதிகார சபைகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்தி பிரஜைகள் தமது ஜனநாயக உரிமைகளை பயன்படுத்த வழிவகுக்கும். 

மேலும் தகவல்களை கோருவதற்கு முன்னரே தகவல்களை வழங்குதல், அதாவது தகவல்களை தாமாக வெளிப்படுத்தல் ஆனது, திறந்த அரசாங்கத்திற்கும் தகவல் அறியும் உரிமைக்கும் முதன்மையான அம்சங்களில் ஒன்றாகும். 

பொது அதிகார சபைகள் அத்தகைய தகவல்களை பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆணையிடுகிறது. ஒவ்வொரு பொது அதிகார சபையும் அவர்களது வரவு-செலவு திட்ட தகவல்கள், கொள்முதல் விபரங்கள், திட்ட அறிக்கைகள் மற்றும் முக்கிய/ குறிப்பிடத்தக்க தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை இணையதளங்கள் அல்லது பிற வழிகள் ஊடாக பகிரங்கமாக வெளியிடுவதற்கு கடமைப்பட்டவர்களாவர். இலங்கையானது இவ்விடயங்களை முறையாக பின்பற்றுவதில் தொடர்ந்தும் பின்தங்கியே காணப்படுகிறது. 

இலங்கையின் சமீபத்தைய மக்கள் எழுச்சியானது அரச நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்திற்குள்ளே காணப்படுகின்ற ஒளிவுமறைவு மற்றும் ஊழல் சார் கலாச்சாரத்திற்கு எதிரான ஓர் கூட்டு பிரதிபலிப்பாகும். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தகவலின் முக்கியத்துவம், தகவல் அணுகலுக்கு  சந்தர்பமில்லாதவிடத்து இரகசியமான நிலையில் அதிகரிக்கும் ஊழல், மக்கள் பிரதிநிதிகளின் சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்கள் வெளியிடல் உள்ளிட்ட ஊழலுக்கு எதிரான முக்கிய பகுதிகள் குறித்து பொது மக்களிடையே இதுவரை கண்டிராத அதிக விழிப்புணர்வு மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, பொதுச் சேவை மற்றும் அரசியல்வாதிகள் மீது அதிக பொறுப்புணர்வுடன் கூடிய நிர்வாக கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்கள் தற்பொழுது அதிகரித்துள்ளன. 

எமது நாடு பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஓர் இக்கட்டான கட்டத்தில் காணப்படுகிறது. இது ஊழல் நிறைந்த பாதையின் ஓர் அடைவினை எட்டியுள்ளது.

 இந்த நெருக்கடியில் இருந்து மீள, மக்களுக்கு தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான அதிகாரம் வழங்கப்பட வேண்டியது இன்றியமையாததாகும். இன்றைய தகவல் அறியும் தினத்தில், ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது பொது அதிகாரசபைகளிடம் பொதுமக்களினது தகவல் அறியும் உரிமையினை சாதகமான விடயமொன்றாக உற்றுநோக்குமாறும் வெளிப்படைத்தன்மையை நோக்கிய தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு உறுதியளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறது.

 எமது நாட்டுப் பிரஜைகள் தமக்குரிய உரிமைகளை புரிந்துக்கொண்டு எந்தவொரு அச்சமும் தயக்கமுமின்றி தகவல் அறியும் உரிமையினை பயன்படுத்தக்கூடிய கலாசாரத்தின் பங்காளர்களாக அவர்கள் இருக்க வேண்டுமென்பது இன்றைய தகவல் அறியும் உரிமை தினத்தின் எதிர்பார்ப்பாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-07 06:02:56
news-image

மட்டக்களப்பு கல்லடிவெட்டை, கானாந்தனை கிராமங்களுக்கு ஒரு...

2025-02-07 04:59:27
news-image

வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டர்...

2025-02-07 04:38:38
news-image

தீ விபத்தில் சிக்கிய இளம் யுவதி...

2025-02-07 04:35:26
news-image

யாழ் மக்கள் தவறுதலாக தேசிய மக்கள்...

2025-02-07 04:30:08
news-image

அரசாங்கத்துக்கு இது தேனிலவு காலம், 10...

2025-02-07 04:16:54
news-image

சட்டமா அதிபருக்கு எதிராக சட்டமா அதிபர்...

2025-02-07 03:59:02
news-image

அரசாங்கம் காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பில்...

2025-02-07 03:50:26
news-image

மே 9 வன்முறை: சேதமடைந்த வீடுகளுக்கு...

2025-02-07 03:21:59
news-image

குழாய் நீரை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட...

2025-02-06 16:21:18
news-image

பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் வகையில் நயவஞ்சகத்துடன் எவரும்...

2025-02-06 16:23:38
news-image

கொள்கலன்களை விரைவாக பரிசோதித்து விடுவிக்க சுங்கம்...

2025-02-06 19:09:09