இந்தியா, பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை தமது நாட்டில் நடத்த இங்கிலாந்து எதிர்பார்ப்பு

By Vishnu

28 Sep, 2022 | 11:01 PM
image

(என்.வீ.ஏ.)

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை தங்கள் நாட்டில் நடத்துவதற்கு ஆவலகாக இருப்பதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

பல நாடுகள் பங்குபற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளை விட இருதரப்பு தொடர்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் 2013க்குப் பின்னர் விளையாடியதில்லை. கடைசியாக இரண்டு நாடுகளும் 2007 டிசம்பரில் டெஸ்ட் போட்டியில் சந்தித்திருந்தன.

இந் நிலையில் பாகிஸ்தானுடன் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் விளையாடிவரும் இங்கிலாந்து அணியினருடன் அங்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் பிரதித் தலைவர் மார்ட்டின் டார்லோ அதற்கான யோசனையை முன்வைத்துள்ளார்.

இத்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து முன்னின்று நடத்த தயார் என்ற      யோசனையை   பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் ரமீஸ் ராஜாவிடம் மார்ட்டின் டார்லோ முன்வைத்துள்ளார்.

ஆனால், இந்த யோசனையை பாகிஸ்தான் ஏற்குமா என்று எதிர்பார்க்க முடியாது.

தனது நாட்டில் நடத்தப்படவேண்டிய கிரிக்கெட் தொடர்களை நடுநிலையான ஐக்கிய அரபு இராச்சியத்தில் பல வருடங்களாக நடத்திவந்த பாகிஸ்தான், தற்போது சொந்த மண்ணில் மூவகை கிரிக்கெட் தொடர்களையும் நடத்திவருகிறது.

இதன் காரணமாக இந்தியாவுக்கு எதிரான தொடரை இங்கிலாந்தில் நடத்த பாகிஸ்தான் உடன்படாது என கருதப்படுகிறது.

இதேவேளை, இந்தியாவும் பாகிஸ்தானும் நடப்பு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் மீதமுள்ள தத்தமது போட்டிகளில் வெற்றிபெற்று சிறந்த சராசரி புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களைப் பெற்றால் அடுத்த வருடம் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஒன்றையொன்று எதிர்த்தாட வாய்ப்புள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரேஸில் - குரோஷியா போட்டியுடன் உலகக்...

2022-12-09 10:18:00
news-image

கலம்போ ஸ்டார்ஸுக்கு முதலாவது வெற்றி :...

2022-12-09 07:40:15
news-image

ஸ்பெய்ன் கால்பந்து அணியின் பயிற்றுநர் நீக்கப்பட்டார்:...

2022-12-08 18:28:45
news-image

தொடர்ச்சியாக 3 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சதம்...

2022-12-08 17:43:11
news-image

ரசிகர்களின் கோஷங்களால் குரோஷியாவுக்கு பீபா 1.94...

2022-12-08 16:12:46
news-image

வரலாறு படைத்தது வத்தளை லைசியம்; நந்துன்,...

2022-12-08 16:14:19
news-image

நான்கு பற்களை இழந்தார் சாமிக நேற்றைய...

2022-12-08 10:46:41
news-image

க்ளடியேட்டர்ஸ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்த ப்றத்வெய்ட்,...

2022-12-08 10:09:41
news-image

மெஹிதி ஹசன் மிராசின் சகலதுறை ஆட்டத்தால்...

2022-12-07 21:48:33
news-image

தீக்ஷன, வியாஸ்காந்த், சதீர, அவிஷ்க அபாரம்...

2022-12-07 21:42:13
news-image

நியூ ஸிலாந்து றக்பி தலைவராக முதல்...

2022-12-07 13:11:52
news-image

ரமொஸின் ஹெட்-ரிக் கோல்களின் உதவியுடன் கால்...

2022-12-07 10:24:18