காதல் விவகாரம் ஒன்றை மையப்படுத்திய தாக்குதல் : அமைச்சர் பிரசன்னவின் மகன் உள்ளிட்ட 5 பேர் கைது

By Vishnu

28 Sep, 2022 | 10:59 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் 20 வயதான மகன் உள்ளிட்ட 5 பேர் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள்  இருவர் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் மகனின், நண்பனின் காதலி என கூறப்படும் யுவதி ஒருவருக்கு வாழ்த்து அட்டை பெற்றுக்கொடுத்தமையை அடிப்படையாகக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், காதல் விவகாரத்தை மையப்படுத்திய தாக்குதலே அது என விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கிரிபத்கொட – மாகொல வீதியிலுள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு அருகில் வைத்து இந்த  தாக்குதல்  நடாத்தப்பட்டுள்ளது.

 தாக்குதலை முன்னெடுப்பதற்காக சந்தேக நபர்கள்,  தொழில் மற்றும் வாணிப அமைச்சின்  செயலரின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள  டொயாடோ ரக  வாகனத்திலேயே வருகை தந்துள்ளதாக  பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த தாக்குதலில் காயமடைந்த இரு மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகளைப் பெர்றுக்கொண்ட பின்னர் தற்போது வீடு திரும்பியுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுகேகொடையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த...

2022-12-09 13:39:36
news-image

உடுகம பிரதேசத்தில் ஒருவர் தாக்கப்பட்டுக் கொலை!

2022-12-09 13:40:31
news-image

இளம்பெற்றோர் போதைப்பொருளிற்கு அடிமையாவது அதிகரிப்பு -...

2022-12-09 13:19:21
news-image

கிளிநொச்சியில் பல கிராமங்களில் 165 க்கும்...

2022-12-09 13:24:01
news-image

வவுனியாவை சேர்ந்தவர் கொழும்பில் 3 ஆவது...

2022-12-09 13:33:48
news-image

ரி - 56 ரக துப்பாக்கியின்...

2022-12-09 13:22:54
news-image

வடக்கு மக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை...

2022-12-09 12:58:15
news-image

சார்ஜன்டின் மனைவியான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்...

2022-12-09 12:24:27
news-image

காற்று மாசடைவது குறித்து யாழ் மக்களுக்கு...

2022-12-09 12:07:04
news-image

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள்...

2022-12-09 11:56:50
news-image

விகாரையில் ஒப்படைக்கப்பட்ட சிறுவன் மர்மமான முறையில்...

2022-12-09 11:55:41
news-image

மன்னாரில் பல கிராமங்களைத் தாக்கிய சூறாவளி

2022-12-09 11:51:18