ஷெஹான் மாலகவுக்கு குற்ற பகிர்வுப் பத்திரம் கையளிப்பு ; பிணையில் விடுவிப்பு

By T. Saranya

28 Sep, 2022 | 04:55 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பிரபல சமூக செயற்பாட்டாளராக அறியப்படும் ஷெஹான் மாலக கமகேவுக்கு இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப் பகிர்வுப் பத்திரிகை கையளிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உளவுத் துறையின் பங்களிப்பு இருப்பதாக ஷெஹான் மாலக பொது வெளியில் கருத்து வெளியிட்ட நிலையில், அதனை மையப்படுத்தி இந்த குற்றப் பகிர்வுப் பத்திரம் சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று அது அவருக்கு கையளிக்கப்பட்டது.

பின்னர் 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும்  5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு  சரீரப் பிணைகளிலும் செல்ல ஷெஹான் மாலகவை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா அனுமதித்தார்.

மருதானை சி.எஸ். ஆர். மத்திய நிலையத்திலிருந்தவாறு  கடந்த 2021 ஆகஸ்ட் 17 ஆம் திகதி ஷெஹான் மாலகவால்   பொது வெளியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடப்பட்டிருந்தது.  அந்த கருத்தால் பொது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தண்டனை சட்டக் கோவையின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 2023 ஜனவரி 13 வரை நீதிமன்றால் ஒத்தி வைக்கப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பௌத்த அறக் கொள்கையை பேணும் சிங்களவர்களை...

2022-11-28 21:07:19
news-image

ஓமான் தூதரக அதிகாரி கொழும்பு விமானநிலையத்தில்...

2022-11-29 05:48:09
news-image

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை...

2022-11-28 16:51:42
news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38