மனச்சிதைவு நோயா­ளர்­களின் மனநிலை

Published By: Robert

20 Nov, 2016 | 12:09 PM
image

மன­நோய்­களால் பீடிக்­கப்­பட்­ட­வர்­களை இந்த சமூகம் விசர், பைத்­தியம் என்ற கடு­மை­யான வார்த்­தை­களால் அழைத்து அவர்­களை சீண்­டிய ஒரு கால­மாக இருந்­தது. இன்று மன­நோய்கள் பற்­றிய தெளிவும் விழிப்­பு­ணர்வும் ஏற்­பட்ட பின்னர் அவர்­களை அனு­தா­பத்­து­டனும் அன்­பு­டனும் நோக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது. இது ஓர் ஆரோக்­கி­ய­மான நிலைமை ஆகும்.

மன­நோய்­களில் பல­வகை உண்டு. மிகச் சாதா­ரண மனப்­பா­திப்பு நோய்கள் தொடக்கம் தீவி­ர­மான நோய்கள் வரை பல­வகையான மன நோய்கள் உண்டு. இன்­றைய கட்­டு­ரையில் மிகத் தீவி­ர­மான மன­நோ­யான மனச்சிதைவு நோய் பற்றி நோக்­குவோம். உலகில் கால் பங்­கினர் ஏதோ ஒருவகை மன­நோயால் பீடிக்­கப்­பட்­டி­ருப்­பினும் மிகச் சிலரே தீவிர மனச்­சி­தைவு நோயால் பீடிக்­கப்­பட்­டுள்­ளார்கள். தீவிர மன­நோ­யான மனச் சிதைவு நோய் தவிர்ந்த மன­நோய்­களை இல­கு­வாகக் குணப்­ப­டுத்­தலாம். மனச்சிதைவு நோயைக்கூட ஆரம்­பத்தில் இனங் கண்டால் தீவி­ர­ம­டை­யாமல் பார்த்­துக்­கொள்ள முடியம்.

மனச்சிதைவு நோயை சிசோ பிரி­ணியா (Schizophrenia) என்று அழைக்­கிறோம். இது மரபு ரீதி­யாக பரம்­ப­ரையில் தொட­ரக்­கூ­டிய நோயாகும். எனினும் அக, புற சூழல்­களின் நெருக்­கீடு இந்த நோய் உரு­வாகும் சாத்­தி­யத்தை அதி­க­ரிக்கும். கொஞ்சம் கொஞ்­ச­மாக ஒரு­வரின் சிந்­தனை, நடத்தை, உணர்ச்­சிகள், ஆளுமை என்­ப­வற்றை மோச­ம­டைய வைக்கும் நோய்தான் மனச்­சி­தைவு நோயாகும். முதலில் சாதா­ரண முரண்­க­ளுடன் ஆரம்­பிக்கும் இந்த மன­நிலை மாறு­பா­டுகள் காலப் போக்கில் தீவி­ர­ம­டைந்து குழப்­ப­மான மன நிலை­யுள்­ள­வ­ராக மாறி­வி­டு­வார்கள். இவர்­க­ளது நினை­வாற்­றலின் குழப்­பத்­தினால் இவர்கள் தமது வாழ்வின் பல ஆண்­டு­களை இழந்­த­வர்கள் போலாகி விடு­கின்­றார்கள். மாய உலகில் சஞ்­ச­ரிப்­ப­வர்­க­ளாக இருப்­பார்கள். 

மனச்­சி­தைவு நோய் பொது­வாக இள­மை­யி­லேயே ஆரம்­பிக்­கின்­றது. பதின்­மப்­ப­ருவ நடுக்­கூறு முதல் முப்­ப­து­களின் பிற்­ப­குதி வரை­யி­லான காலம் வரையில் நோய் ஆரம்­பிக்கும் காலம் பொது­வாக இருக்கும். எனினும் மனச்­சி­தைவு நோய்க்­குள்­ளா­ன­வர்­களின் நோய் தொடரக் கூடி­யது. உரிய சிகிச்சை பெறா­விட்டால் காலம் முழு­வதும் நோயா­ள­ரா­கவே இருப்­பார்கள். ஆரம்­பத்­தி­லேயே நோயை இனங்­கண்டு உரிய சிகிச்சை பெற்று வந்தால் நோயின் தீவிர தன்­மை­யி­லி­ருந்து விடு­பட்டு ஓர­ளவு இயல்பு வாழ்க்கை வாழ முடியும். தீவிர மனச்­சி­தைவு நோயை முழு­மை­யாகக் குண­மாக்­கு­வது கடினம். எனினும் ஒழுங்­கான சிகிச்சை மூலம் நோயை கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­திருக் முடியம்.

மூளையில் சுரக்கும் சில இர­சா­யன பொருட்­களின் மாறு­பா­டுகள் இந்­நோய்க்­கான கார­ண­மாகும். இது பரம்­பரை அல­கு­களால் தீர்­மா­னிக்­கப்­ப­டு­கின்­றது. ஏதேனும் ஒரு சூழ்­நி­லையில் தீவி­ர­மான மனப்­பி­ரச்­சி­னைகள் ஏற்­ப­டும்­போது இந்நோய் வெளிப்­படும் சாத்­தியம் உண்டு. மன­நோய்­களை இனம் காண்­ப­தற்கு அறி­கு­றி­களை அவ­தா­னிப்­பதன் மூலம் முடியும். குறிப்­பான உடற்­ப­ரி­சோ­த­னைகள் இல்லை. அறி­கு­றி­களின் புள்­ளி­யிடல் முறையே பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. 

நோயின் அறி­கு­றிகள்

மனச்­சி­தைவு நோயா­ளர்கள் குழப்­ப­ம­டைந்­த­வர்­க­ளா­கவும் மாறு­பட்ட நடத்­தை­யுள்­ள­வர்­க­ளா­கவும் இருப்பர்.  இவர்­க­ளது நடத்தை இயல்­பா­ன­தாக இருக்­காது. தனக்குள் பேசிக் கொள்­ப­வர்­க­ளா­கவும் சிரிப்­ப­வர்­க­ளா­கவும் இருப்­பார்கள். பொது­வாக தனி­மையை விரும்­பு­வ­துடன் பிற­ருடன் கதைக்­காமல் ஒதுங்கி இருப்­பார்கள். சிந்­த­னை­களில் தெளிவும் நியாயத்­தன்­மையும் இருக்­காது. தண்­ணீரில் குளிப்­பதில் அதிகம் ஆர்­வ­முள்­ள­வர்­க­ளாக இருப்­பார்கள். சிலர் குளிப்­பது, உடை மற்­று­வது, சாப்­பி­டு­வது என அன்­றாட செயற்­பா­டு­களைக் கூட செய்­யாது சோம்­ப­லாக இருப்­பார்கள். எதைச் செய்­வ­திலும் ஆர்வம் குன்­றி­ய­வர்­க­ளாக இருப்­பார்கள். இவர்­க­ளது காதில் இரைச்­சலை தனியே இருக்­கையில் உணர்­வார்கள். கோபமும் சோகமும் சந்­தேகக் குணமும் உள்­ள­வர்­க­ளாக இருப்­பார்கள். பிறர் தனக்குத் தீங்கு இழைப்­ப­வர்­க­ளாக செயற்­ப­டு­வ­தாக நினைப்­பார்கள். உற­வு­க­ளையும் நண்­பர்­க­ளையும் கூட நம்­ப­மாட்­டார்கள். தூக்கக் குறைவு, பசி­யின்மை இருக்கும். 

இவர்கள் ஒரு­போதும் தாம் மன­நோய்க்கு உள்­ளாகி இருப்­பதை ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்கள். சிகிச்­சைக்கு அழைத்­துச்­செல்ல கூப்­பிட்­டாலும் மறுப்­பார்கள். எனினும் ஒரு­வரில் மேற்­கு­றிப்­பிட்ட அறி­கு­றி­க­ளுடன் குழப்­பத்தை அவ­தா­னித்தால் எப்­ப­டியும் அவர்­களை சிகிச்­சைக்கு அழைத்­துச்­செல்ல வேண்டும். ஆரம்­பத்தில் அழைத்துச் சென்றால் சில மாத்­தி­ரை­களைப் பாவிப்­பதன் மூலம் நோயைக் கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்க முடியும்.

மனச்­சி­தைவு நோயா­ளர்­களுக்கான சிகிச்சை

மனச்­சி­தைவு நோயா­ளர்­களின் சிகிச்­சையில் மருந்து மாத்­தி­ர­மின்றி குடும்­பத்­த­வரின் அர­வ­ணைப்பு, சமூ­கத்தின் அனு­ச­ரிப்பு என்­ப­னவும் முக்­கி­ய­மா­னவை. நோய் ஓர­ளவு கட்­டுப்­பாட்­டுக்குள் வரும்­போது உள­வ­ளத்­து­ணைகள் (Counseling) இவர்­க­ளது இயல்பு நிலை தொடர்­வ­தற்கு பெரிதும் உதவும். மனச்­சி­தைவு நோயா­ளர்கள் பிறர் தம்மை கொல்ல நினைப்­ப­தா­கவும் தீங்கு விளை­விக்கப் போவ­தா­கவும் கரு­து­வார்கள். அவர்கள் நோயினால்தான் இவ்­வாறு நடக்­கின்­றார்கள் என்­பதால் குடும்ப உறுப்­பி­னர்கள் நோயா­ளியின் கூற்றை மறுத்து வாதிடக்கூடாது. அதே­வேளை அவர்­க­ளது கூற்றை ஏற்­றுக்­கொள்­வ­தா­கவும் கூறக்­கூடாது. மன­நோ­யா­ளர்­க­ளுக்கு கோபம் வரு­வது இயல்பு என்­பதைப் புரிந்து கொண்டு அவர்கள் கோபப்­பட்­டாலும் அவர்­களைக் கோபிக்­கக்­கூ­டாது. சிலவேளை­களில் அவர்கள் மருந்தைக் கூட குடிக்க மறுப்­பார்கள். தன்னை விஷம் வைத்துக் கொல்லப் பார்ப்­ப­தாகக் கூறி ஏசு­வார்கள். அவர்­களை சமா­தா­னப்­ப­டுத்தி மருந்­து­களை வழங்க வேண்டும். அவ்­வாறு சமா­தா­னப்­ப­டுத்தி மருந்தை நான் கொடுத்­த­போது அதை என் மீது துப்­பிய அனு­ப­வமும் உண்டு. மனச்­சி­தைவு நோயா­ளர்­க­ளுக்கு அன்பும் அர­வ­ணைப்பும் முக்­கி­ய­மா­னது.

மாத்­தி­ரை­க­ளுக்கு மேலாக சில­ருக்கு ஊசி மருந்தும் பாவிக்­கப்­ப­டு­கி­றது. மிகத் தீவி­ர­மான மனச்­சி­தை­வுக்கு உட்­பட்­ட­வர்­களை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்து சிகிச்சை அளிக்க வேண்­டிய நிலை உள்­ளது. அதற்­கான வைத்­தி­ய­சா­லை­களும் எமது நாட்டில் உள்­ளன. நோயின் தீவி­ரத்­தன்மை குறைந்­ததும் வெளி­நோ­யாளர் பிரிவில் சிகிச்சை அளிக்­கலாம். மன நோயா­ளர்­களில் மனநிலை மாற்றத்தையும் (Mood Swings) அவதானிக்கலாம். நல்ல மனநிலையில் இருக்கும்போது உளவளத்துணையை மேற்கொள்ளலாம். மனச்சிதைவு நோயாளியின் சிகிச்சையை மருத்துவரின் ஆலோசனை இன்றி நிறுத்தக்கூடாது. சுகமாக இருக்கிறார் என்று நிறுத்தினால் நோய் தீவிரமடையும் சாத்தியமுண்டு. 

மனநோயாளர்களின் நோய்நிலையை கட்டுப்படுத்த முடியாமல் மிகத் தீவிர இருக்கும் போது மின்னதிர்வு சிகிச்சை (Electric Shock Treatment) வழங்கப்படுகின்றது. மனச்சிதைவு நோயாளரை இயல்பு வாழ்க்கைக்கு முழுமையாகக் கொண்டுவருவது சிரமம் எனினும், மனப்பிறழ்விலிருந்து கணிசமான அளவு மீண்டு வாழும் சாத்தியம் உண்டு.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுநீரக நீர்கட்டி பாதிப்பிற்குரிய சிகிச்சை

2026-05-12 15:01:18
news-image

டோகோஃபோபியா எனும் திருமணமான பெண்களுக்கு ஏற்படும்...

2026-05-11 16:55:02
news-image

செப்டிக் என்செலோபதி எனும் மூளை பாதிப்பிற்குரிய...

2026-05-07 16:06:06
news-image

இதய இரத்த நாள அடைப்பு பாதிப்பிற்கான...

2026-05-06 18:44:07
news-image

தைரொய்ட் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-05-05 17:56:46
news-image

டயாலிசிஸ் செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு பலனளிக்கும்...

2026-05-02 14:00:06
news-image

மாரடைப்பு ஏற்படுமா ? என்பதை துல்லியமாக...

2026-05-01 15:42:43
news-image

கீமோதெரபி சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏற்படுமா..?

2026-04-30 16:01:21
news-image

இலங்கையில் நால்வரில் ஒருவருக்கு இரைப்பை அழற்சி

2026-04-29 22:31:31
news-image

சர்க்கரை நோயாளிகள் கோடைகால வெப்பத்தை எதிர்கொள்வது...

2026-04-29 18:36:04
news-image

ஒன்றுக்கும் மேற்பட்ட இதய ரத்த நாள...

2026-04-27 16:03:52
news-image

மூளையில் ஏற்படும் காயங்களுக்கான நவீன சிகிச்சை

2026-04-25 13:06:07