கொழும்பு - கஜீமா தோட்ட தீ பரவல் ; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விரைவில் வேறொரு இடத்தில் குடியமர்த்த திட்டம்

By T. Saranya

28 Sep, 2022 | 04:51 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

கொழும்பு கஜீமா தோட்டத்தில் இடம்பெற்ற தீ பரவல் காரணமாக 80 வீடுகள் சேதமடைந்துள்ளதோடு சுமார் 300 பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைப்பட்டிருகிறார்கள். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் குடிநீர் வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விரைவில் வேறொரு இடத்தில் குடியமர்த்த எதிர்பார்த்துள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கஜீமா தோட்டத்தில் நேற்று பாரியளவில் தீ பரவல் ஏற்பட்டு இருந்தது. கொழும்பு தீயணைப்பு படையினர் மற்றும் பிரேதசமக்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தனர்.

இங்கு நிர்மாணிக்கப்பட்டு இருந்த 220 வீடுகளில் 54 நான்கு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது. மேலும் 11 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. தற்போது 300 பேர் தற்காலிகமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி ஜப்பானிலிருந்து ஜனாதிபதி செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அவர் பாதிக்கப்பட்ட இடத்திற்கும் வருகை தந்து தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் களனி விகாரை மற்றும் மோதரஉயன சன சமூக நிலையத்திலும் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இடர்முகாமைத்துவ மத்திய நிலையம், கொழும்பு மாநகர சபை பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் இது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விரிவாக கலந்துரையாட எதிர்பார்த்து உள்ளோம். ஒன்றரை வருடத்தில் இடம்பெற்ற மூன்றாவது அனர்த்தமாகும். இந்நிலையில் குடும்பங்களை வேறொரு இடத்தில் குடியமர்த்த எதிர்பார்க்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பௌத்த அறக் கொள்கையை பேணும் சிங்களவர்களை...

2022-11-28 21:07:19
news-image

ஓமான் தூதரக அதிகாரி கொழும்பு விமானநிலையத்தில்...

2022-11-29 05:48:09
news-image

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை...

2022-11-28 16:51:42
news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38