தலைமுடியை வெட்டி ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த துருக்கி பாடகி

By T. Saranya

28 Sep, 2022 | 04:02 PM
image

ஈரானில் ஹிஜாப்பிற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு பல நாடுகளில் ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில், ஈரானில் நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு துருக்கி பாடகி ஆதரவு தெரிவித்துள்ளார். 

அந்நாட்டின் தெஹ்ரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி நடத்திய தாக்குதலில் கோமா நிலைக்கு சென்ற 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த 17 ஆம் திகதி உயிரிழந்தார். 

ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி பொலிஸார் தாக்கியதில் இளம்பெண் மாஷா உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். 

ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நாட்டின் பல நகரங்களுக்கு பரவி வருகிறது. இதுவரை 46 நகரங்களில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் பரவியுள்ளது. 

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கி நாட்டின் பிரபல பாடகி மிலிக் மோசோ. இவர் நேற்று அந்நாட்டில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பாடலை பாடிமுடிந்த பின்னர் நிகழ்ச்சி மேடையில் மிலிக் மோசா தனது தலைமுடியை வெட்டி ஈரானில் நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தினார். 

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புர்கா அணிந்து நடனமாடிய 4 ஆண்...

2022-12-09 13:22:54
news-image

சீனாவில் மாணவர்கள் போராட்டம்

2022-12-09 13:27:25
news-image

ரஷ்ய வணிக வளாகத்தில் கால்பந்து மைதானம்...

2022-12-09 12:30:43
news-image

'அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுங்கள்'...

2022-12-09 13:19:06
news-image

இலங்கை இனப்படுகொலை: இந்தியா வாக்களிக்காததன் காரணம்...

2022-12-09 12:09:58
news-image

ஐரோப்பிய எல்லைகளில் குடியேற்றவாசிகள் முன்னர் ஒருபோதும்...

2022-12-09 11:56:20
news-image

ஒரு பாலினத் திருமணங்களைப் பாதுகாக்கும் சட்டமூலம்...

2022-12-09 11:49:09
news-image

இந்தியாவில் திருமண நிகழ்வில் எரிவாயு சிலிண்டர்கள்...

2022-12-09 11:17:28
news-image

அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீராங்கனை பிரிட்னியும் ரஷ்ய...

2022-12-09 10:53:10
news-image

ரயில் நிலைய மேடைக்கும் ரயிலுக்கும் இடையில்...

2022-12-08 22:18:00
news-image

2022 இன் சிறந்த நபர் -...

2022-12-08 15:53:38
news-image

ஈரானில் மாஷா அமீனி ஆர்ப்பாட்டக்காரர் ஒருவருக்கு...

2022-12-08 14:06:43