17 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் : கண்டி திரித்துவக் கல்லூரியும் மருதானை புனித சூசையப்பர் கல்லூரியும் இணை சம்பியன்கள்

By Digital Desk 5

28 Sep, 2022 | 03:21 PM
image

(என்.வீ.ஏ.)

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடத்தப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான 17 வயதுக்குட்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டியில் கண்டி திரித்துவ கல்லூரியும் மருதானை புனித சூசையப்பர் கல்லூரியும் இணை சம்பியன்களாக பிரகடனப்படுத்தப்பட்டன.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் மக்கொன, சரே மைதானத்தில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற இறுதிப் போட்டி சம நிலையில் முடிவடைந்ததை அடுத்து இரண்டு அணிகளையும் இணை சம்பியன்களாக பிரகடனப்படுத்துவதென பாடசாலை கிரிக்கெட் ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்தனர்.

இப் போட்டியில் இரண்டு அணிகளும் 198 ஓட்டங்கள் என்ற ஒரே மொத்த எண்ணிக்கையைப் பெற்றன.

முதலில் துடுப்பெடுத்தாடிய திரித்துவ அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஜயவி லியனகம 48 ஓட்டங்களையும் திமன்த மஹாவித்தான, வதில உதார ஆகியோர் தலா 30 ஓட்டங்களையும் கவிந்து ஜயரட்ன ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

புனித சூசைப்பர் பந்துவீச்சில் கவின் பத்திரண 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் யெனுல தெவ்துச 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துனிக் பெரேரா 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் நரேன் முரளிதரன் 42 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

199 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புனித சூசையப்பர் அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும்   இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றதால் போட்டி சம நிலையில் முடிவடைந்தது.

சஹான் தாபரேயும் அணித் தலைவர் கெனத் சஸ்மித்தவும் 3ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து புனித சூசையப்பர் அணியை நல்ல நிலையில் இட்டனர். (92-3 விக்.)

ஆனால், அதன் பின்னர் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 3 விக்கெட்களும் (129 - 6 விக்.), அதனைத் தொடர்ந்து 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 3 விக்கெட்களும் (166 - 9 விக்.) சரிந்தன.

இதனிடையே ஒரு பக்கத்தில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த தாபரே 57 ஓட்டங்கள் பெற்ற நிலையில் 7ஆவதாக ஆட்டமிழந்தது அணிக்கு பேரிடியைக் கொடுத்தது.

இதன் காரணமாக திரித்துவ அணி சம்பியனாகும் என பெரிதும் எதிர்பாரக்கப்பட்டது.

எவ்வாறாயினும் கடைசி விக்கெட்டில் ஜோடி சேர்ந்த துனிக் பெரேராவும் ஓஷத குணசிங்கவும் 32 ஓட்டங்களைப் பகிர்ந்து புனித சூசையப்பர் அணியைத் தோல்வியிலிருந்து மீட்டதுடன் மொத்த எண்ணிக்கையை சமப்படுத்தவும் உதவினர். கடைசிப் பந்தில் துனிக் பெரேரா வெற்றி ஓட்டத்தைப் பெற முயற்சித்து ரன் அவுட் ஆனார்.

துடுப்பாட்டத்தில் தாபரேயை விட நரேன் முரளிதரன், கெனத் சஸ்மித்த ஆகியோர் தலா 20 ஓட்டங்களையும் ரிஷ்ம அமரசிங்க, யெனுல தெவ்துச, ஓஷத குணசிங்க ஆகியோர் தலா 17 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களில் குணசிங்க ஆட்டமிழக்காதிருந்தார்.

அத்துடன் சசன்க ரணவீர, துனிக் பெரேரா ஆகிய இருவரும் தலா 15 ஓட்டங்களைப் பெற்றனர்.

திரித்துவ பந்துவீச்சில் ஸ்வீத் அனுரஜீவ 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜயவி லியனகம 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரேஸில் - குரோஷியா போட்டியுடன் உலகக்...

2022-12-09 10:18:00
news-image

கலம்போ ஸ்டார்ஸுக்கு முதலாவது வெற்றி :...

2022-12-09 07:40:15
news-image

ஸ்பெய்ன் கால்பந்து அணியின் பயிற்றுநர் நீக்கப்பட்டார்:...

2022-12-08 18:28:45
news-image

தொடர்ச்சியாக 3 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சதம்...

2022-12-08 17:43:11
news-image

ரசிகர்களின் கோஷங்களால் குரோஷியாவுக்கு பீபா 1.94...

2022-12-08 16:12:46
news-image

வரலாறு படைத்தது வத்தளை லைசியம்; நந்துன்,...

2022-12-08 16:14:19
news-image

நான்கு பற்களை இழந்தார் சாமிக நேற்றைய...

2022-12-08 10:46:41
news-image

க்ளடியேட்டர்ஸ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்த ப்றத்வெய்ட்,...

2022-12-08 10:09:41
news-image

மெஹிதி ஹசன் மிராசின் சகலதுறை ஆட்டத்தால்...

2022-12-07 21:48:33
news-image

தீக்ஷன, வியாஸ்காந்த், சதீர, அவிஷ்க அபாரம்...

2022-12-07 21:42:13
news-image

நியூ ஸிலாந்து றக்பி தலைவராக முதல்...

2022-12-07 13:11:52
news-image

ரமொஸின் ஹெட்-ரிக் கோல்களின் உதவியுடன் கால்...

2022-12-07 10:24:18