சிறுவர்கள் பட்டினியால் பாதிக்கப்படுவது குறித்த தகவல் வெளியான பின்னர் அரசாங்க உத்தியோகத்தர்களிற்கு சமூக ஊடக தடை

By Rajeeban

28 Sep, 2022 | 12:40 PM
image

AFP

 நாட்டின் பொருளாதார நிலைமை காரணமாக போதிய உணவு இன்மையால் பாடசாலைகளில் மாணவர்கள் மயங்கி விழுகின்றனர் என சில அதிகாரிகள்  தெரிவித்ததை தொடர்ந்து அரசாங்க ஊழியர்கள் சமூக ஊடகங்களில் கருத்துக்களை  வெளியிடுவதற்கு இலங்கை அரசாங்கம் தடைவிதித்துள்ளது.

1.5 மில்லியன் அரசாங்க உத்தியோகத்தர்கர்களிற்கு புதிய உத்தரவை வெளியிட்டுள்ள பொதுநிர்வாக அமைச்சு செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கமுடியாது என ஏற்கனவே காணப்படும் நீண்ட கால தடை தற்போது சமூக ஊடகங்களிற்கும் நீடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிடுவது குற்றமாக கருதப்படலாம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படலாம் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதிய உணவின்மையால் பாடசாலைகளில் மாணவர்கள் மயங்கிவிழுகின்றனர் என மாகாண சுகாதார கல்வி அதிகாரிகள் தெரிவித்த பின்னரே இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.

2021 இன் பிற்பகுதி முதல் இலங்கையின் 22 மில்லியன் மக்கள் நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக துன்பத்தில் சிக்குண்டுள்ளனர்- பல அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு போதிய டொலர் இல்லாத நிலையில் அரசாங்கம் காணப்படுகின்றது.

இதன் காரணமாக பெருமளவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன் பணவீக்கம் சர்வதேச அளவில் சிம்பாப்வேயிற்கு அடுத்ததாக காணப்படுகின்றது .ஜூலை மாதத்தில் கோட்டாபய ராஜபக்சவைவெளியேற்றுவதற்காக ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன.

சிறுவர்கள் மத்தியில் போசக்கின்மை காணப்படுகின்றது என்பதை நிராகரித்துள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அரசியல் நோக்கம் கொண்ட சுகாதார பணியாளர்கள் நிலவரத்தை வேண்டுமென்று மிகைப்படுத்துகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் உலக உணவு திட்டம் தனது சமீபத்தைய அறிக்கையில் ஆறுமில்லியன் மக்கள் - இலங்கையின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் உணவுப்பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் அவர்களிற்கு மனிதாபிமான உதவி அவசியம் என தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓமான் பணிப்பெண்கள் விவகாரம் : மத்திய...

2022-12-01 14:33:01
news-image

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக மலையகத்தில் ஒன்றிணைந்த...

2022-12-01 14:32:19
news-image

உலக அழகி பிரியங்கா சோப்ரா மீதே...

2022-11-29 16:09:16
news-image

மத்திய வங்கியின் ஆளுநருக்கு மாதம் நான்கு...

2022-11-30 15:48:59
news-image

விடத்தல்தீவு எனும் இயற்கைப் வனத்தைப் பாதுகாப்போம்

2022-11-29 17:25:43
news-image

உணரப்பட வேண்டிய பெறுமதி

2022-11-28 15:05:06
news-image

உலக நீதி சீர்குலைந்த நாள் :...

2022-11-28 13:21:05
news-image

ஸ்கொட்லாந்தும் சுயநிர்ணய உரிமையும் - ஒரு...

2022-11-28 12:29:41
news-image

உலகப் போர் நினைவுச் சின்னங்களின் பின்னணியில்...

2022-11-28 11:05:34
news-image

அரசியல் தீர்வு: முஸ்லிம் தரப்பின் நிலைப்பாடு...

2022-11-27 17:30:18
news-image

உக்ரேனில் நீளும் போரும் குறைந்துவரும் ஆதரவும்

2022-11-27 17:16:51
news-image

வரவு - செலவுத் திட்டம் 2023...

2022-11-27 16:08:24