யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் தனிமையில் வசித்த பெண்ணொருவரை வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இருவர் தாக்கியதாகவும் , பெண்ணின் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும் வட்டுக்கோட்டை பொலிஸாரின் விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் வீட்டில் தனிமையில் வசித்து வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை (27) அதிகாலை இருவர் வீட்டின் வளாகத்தினுள் பொருத்தப்பட்டு இருந்த சிசிரிவி கமராக்களை உடைத்து சேதப்படுத்திய பின்னர், வீட்டின் பிரதான கதவினை சேதப்படுத்தி வீட்டினுள் அத்துமீறி நுழைந்து பெண் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது , நகைகளும் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை முதல் கட்ட விசாரணைகளின் அடிப்படையில் , இரு குடும்பங்களுக்கு இடையிலான தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே பெண்ணின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கிறது.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM