பிரபாஸின் 'ஆதி புருஷ்' படத்தின் குறு முன்னோட்டம், பதாகை வெளியீட்டு திகதி அறிவிப்பு

By Digital Desk 5

28 Sep, 2022 | 10:37 AM
image

'பாகுபலி' படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஆதி புருஷ்' எனும் படத்தின் குறு முன்னோட்டம் மற்றும் பதாகை வெளியிடப்படும் இடமும், திகதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்ற இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஆதி புருஷ்'. இதில் பாகுபலி படப்புகழ் நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். இவர்களுடன் பொலிவுட் நடிகர்களான சயீஃப் அலி கான் மற்றும் சன்னி சிங் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாஸட் பரம்பரா இசையமைத்திருக்கிறார். இராமாயணம் எனும் இதிகாசத்தை தழுவித் தயாராகியிருக்கும் இந்த படத்தை டீ சிரீஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பட்ஜட்டில் தயாரித்திருக்கிறது. 

'ஆதி புருஷ்' படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்களிடத்தில் இப்படத்தை பற்றிய ஆர்வமும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.  இந்நிலையில் இப்படத்தின் குறு முன்னோட்டம் மற்றும் பதாகை ஒக்டோபர் இரண்டாம் திகதியன்று  வட இந்தியாவிலுள்ள புனித நகரமான அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் வெளியிடப்படவிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து இவ்விடத்தில் நடைபெறும் பிரம்மாண்டமாக நிகழ்வில் படத்தின் இயக்குநர் ஓம் ராவத், தயாரிப்பாளர் பூஷன் குமார், சுப்பர் ஸ்டார் பிரபாஸ், படத்தின் நாயகி கீர்த்தி சனோன் ஆகியோர் பங்குபற்றுகிறார்கள். 

இதனிடையே இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் தயாராகும் 'ஆதி புருஷ்' திரைப்படம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் படமாளிகைகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘சபரி’...

2022-12-09 11:40:19
news-image

நயன்தாராவின் 'கனெக்ட்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

2022-12-09 11:39:53
news-image

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்த...

2022-12-09 11:36:08
news-image

ஹிப் ஹொப் ஆதி தமிழாவின் ஜோடியாக...

2022-12-09 11:21:41
news-image

முதலிடத்தை பிடித்த தனுஷ்

2022-12-08 11:57:54
news-image

தொடர்ந்து திரைப்படங்களை தயாரிப்பேன்- விஷ்ணு விஷால்

2022-12-08 13:08:34
news-image

புனித யாத்திரை மேற்கொண்டிருக்கும் நடிகை மும்தாஜ்

2022-12-08 11:09:50
news-image

யோகி பாபு நடிக்கும் 'மலை' படத்தில்...

2022-12-08 11:04:20
news-image

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ...

2022-12-08 10:43:40
news-image

மண வாழ்க்கையை உற்சாகமாக தொடங்கிய ஹன்சிகா

2022-12-07 12:31:12
news-image

பரத் நடிக்கும் 'லவ்' படத்தின் டீசர்...

2022-12-07 11:16:56
news-image

நயன்தாரா நடித்திருக்கும் 'கனெக்ட்' திரைப்படத்தின் முன்னோட்ட...

2022-12-07 11:14:53