அவருக்கென்ன பிரச்சினையோ !

By Sindu

28 Sep, 2022 | 10:35 AM
image

கேள்வி: 

நான் ஒரு பெண். வயது 24. இறுதி யுத்தத்தின் போது அப்பா இறந்துவிட்டார். என் காலிலும் குண்டடிபட்டு கால் சற்று ஊனமாக இருக்கிறது. இந்நிலையில் ஒரு அண்ணாவுடன் தொலைபேசியில் அடிக்கடி பேசி வந்தேன். தினமும் ஒரு குறுஞ்செய்தியேனும் போடாமல் இருக்க மாட்டான். இப்போது நிலைமை தலைகீழ். அவனுடனான தொடர்பு கிட்டத்தட்ட அறுந்தேவிட்டது. எனது கால் ஊனம் என்பதால்தான் என்னை தவிர்க்கிறானோ என நினைத்து, நானும் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. எனது சந்தேகம் உண்மையாக இருக்குமா?

பதில்: 

இறுதி யுத்தத்தில், இழப்புகளின் வலியைக் கண்டு, வளர்ந்து, அனுபவித்த நீங்கள், இப்படியொரு இழப்புக்காக வருந்துவது ஏனோ! உங்களுடைய தாழ்வு மனப்பான்மையே உங்கள் சந்தேகத்துக்கு காரணம். அதைத் தூக்கி எறியுங்கள். 

உங்கள் நட்பு உண்மையானது என நீங்கள் நம்பினால், நீங்களே அவருடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம். அவர் என்ன பிரச்சினையில் இருக்கிறாரோ? எனவே, முயற்சியை நீங்களே ஆரம்பியுங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right