கல்கிசை பகுதியில் 2 கோடி பெறுமதியான ஹெரொயின் போதைப்பொருளுடன் 4 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 2 கிலோகிராம் ஹெரொயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

3 மாலைத்தீவு பிரஜைகள் மற்றும் ஒரு பாகிஸ்தான் பிரஜை ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.