கொழும்பு - பாலத்துறை பகுதியில் தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானில் இருந்து அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
பாலத்துறை கஜிமாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு கொழும்பு மாவட்டச் செயலாளர், முப்படையினர், தீயணைப்புப் படையினர், சுகாதாரத் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களின் தேவைகளைக் பூர்த்திசெய்யுமாறும், இன்று இரவு முதல் அவர்களுக்கான வசதிகளை உடனடியாக வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன்படி, தீயை அணைக்க தேவையான அதிகபட்ச தலையீட்டை வழங்கவும், தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாக வழங்கவும் அனைத்து துறைகளும் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளன.
இதேவேளை, தீயினால் ரும் சிரமத்திற்கு உள்ளாகும் தாய்மார்கள், பெண்கள் மற்றும் சிறு பிள்ளைகளுக்கு தேவையான வசதிகள் தொடர்பிலும் அவதானிக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் அறிவுறுத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM