சுந்தர் சி யின் 'காஃபி வித் காதல்' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

By Digital Desk 5

27 Sep, 2022 | 05:20 PM
image

தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான சுந்தர். சி இயக்கத்தில் தயாராகியிருக்கும் 'காஃபி வித் காதல்' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது.

தமிழ் திரையுலகில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்களை இயக்குவதில் தனித்துவமான அடையாளத்தை பெற்றிருக்கும் இயக்குநர்களில் முதன்மையானவரான சுந்தர். சி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'காஃபி வித் காதல்'. 

இதில் நடிகர்கள் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி நடிகைகள் மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, திவ்யதர்ஷினி, சம்யுக்தா ஷான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஈ. கிருஷ்ணசாமி செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். 

காதலுக்கும், கொமடிக்கும் முக்கியத்துவம் கொடுத்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அவ்னி சினி மேக்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் குஷ்பூ சுந்தர் அவர்களும், பென்ஸ் மீடியா எனும் நிறுவனம் சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் அவர்களும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் நட்சத்திர ஹொட்டேலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 'காஃபி வித் காதல்' படத்தின் முன்னோட்டத்தில் திருமணத்திற்கு முந்தைய காதல் குறித்தும், திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகான காதல் குறித்தும் கொமடியுடன் கதையும் காட்சிகளும் விவரித்திருப்பதால் இந்தத் திரைப்படமும் கலகலப்பாக இருக்கும் என தெரிய வருகிறது. இந்த முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்த திரைப்படம் ஒக்டோபர் ஏழாம் திகதியன்று பட மாளிகையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘சபரி’...

2022-12-09 11:40:19
news-image

நயன்தாராவின் 'கனெக்ட்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

2022-12-09 11:39:53
news-image

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்த...

2022-12-09 11:36:08
news-image

ஹிப் ஹொப் ஆதி தமிழாவின் ஜோடியாக...

2022-12-09 11:21:41
news-image

முதலிடத்தை பிடித்த தனுஷ்

2022-12-08 11:57:54
news-image

தொடர்ந்து திரைப்படங்களை தயாரிப்பேன்- விஷ்ணு விஷால்

2022-12-08 13:08:34
news-image

புனித யாத்திரை மேற்கொண்டிருக்கும் நடிகை மும்தாஜ்

2022-12-08 11:09:50
news-image

யோகி பாபு நடிக்கும் 'மலை' படத்தில்...

2022-12-08 11:04:20
news-image

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ...

2022-12-08 10:43:40
news-image

மண வாழ்க்கையை உற்சாகமாக தொடங்கிய ஹன்சிகா

2022-12-07 12:31:12
news-image

பரத் நடிக்கும் 'லவ்' படத்தின் டீசர்...

2022-12-07 11:16:56
news-image

நயன்தாரா நடித்திருக்கும் 'கனெக்ட்' திரைப்படத்தின் முன்னோட்ட...

2022-12-07 11:14:53