இந்தியாவில் தயாராகும் அப்பிள் கைத்தொலைபேசி

By T. Saranya

27 Sep, 2022 | 03:29 PM
image

அப்பிள் நிறுவனம் ஐபோன் 14 ஐ இந்தியாவில் தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னைக்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஐபோன் - 14 ஐ தயாரிக்க உள்ளது.

இது குறித்த அப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,  ஐபோன் 14 உள்ளூரில் உற்பத்தியானால் இந்திய அரசாங்கத்தின் உற்பத்தி - இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பி.எல்.ஐ.) திட்டத்தில் நேரடியாக பிரதிபலிக்கப்படும் என்று கருதப்படுகிறது.

அப்பிள் நிறுவனம் தனது பெரும்பாலான தொலைபேசிகளை சீனாவில் தயாரிக்கிறது. ஆனால் சீனாவின் அதிகார தலைமையகமான பீஜிங்கிற்கும் அமெரிக்கத் தலைமையகமான வொஷிங்டனுக்கும் இடையே பதற்றமான போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சில உற்பத்திகளை அங்கிருந்து வெளியிடங்களுக்கு மாற்றியுள்ளது.

சீனாவில் கொவிட்-19 தொற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள 'சீரோ- கொவிட்' கொள்கைகள், வணிக நடவடிக்கைகளுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளன.

அப்பிள் தொழில்நுட்ப நிறுவனம் இந்த மாத ஆரம்பத்தில் அதன் தற்போதைய ஐபோன்களை வெளியிட்டது.

"புதிய ஐபோன்  -14 ஐ புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் முக்கியமான பாதுகாப்பு திறன்களை உள்ளடக்கி அறிமுகப்படுத்துகிறது.

ஐபோன் 14 ஐ இந்தியாவில் தயாரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்," என ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கைத்தொலைபேசிகளை தயாரிப்பதன் மூலம், அப்பிள் இந்தியாவில் தனது கால்தடத்தை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி, அப்பிள் நிறுவனத்தில் இந்தியாவின் சந்தைப் பங்கு சுமார் 4 வீதமாக இருந்தது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் மிகவும் மலிவான தென் கொரிய மற்றும் சீன ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிட அமெரிக்க நிறுவனமானது போராடி வருகிறது.

ஆனால் இந்தியாவில் உற்பத்தி என்பது, உதிரிபாகங்கள் மற்றும் பிற வரிகள் மீது அதிக இறக்குமதி வரிகள் இருப்பதால், நாட்டில் போன்கள் மலிவாக இருக்கும் என்று எடுத்துக்கொள்ள முடியாது.

எனவே இந்தியர்கள் தங்கள் ஐபோனில் 'மேட் இன் இந்தியா' குறிச்சொல்லைப் பார்க்கும்போது, அதை சொந்தமாக்க அவர்கள் இன்னும் அதிக தொகை செலுத்த வேண்டியிருக்கும்.

இந்தியாவில் ஐபோன் உற்பத்தி அதிகரித்துள்ளது என்ற அறிவிப்பு பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

நாட்டின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட அவரது அரசாங்கம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு "மேக் இன் இந்தியா" பிரச்சாரத்தைத் தொடங்கியது.

அப்பிளின் அறிவிப்பு, தாய்வான் மற்றும் வர்த்தகம் தொடர்பாக சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்து வருவதால், இடையூறுகளைத் தவிர்ப்பதற்காக விநியோகச் சங்கிலிகளை பல்வகைப்படுத்துவதற்கான அதன் சமீபத்திய நகர்வைக் குறிக்கிறது.

இந்த மாத ஆரம்பத்தில், முதலீட்டு வங்கியான ஜேபி மோர்கனின் ஆய்வாளர்கள், ஆப்பிள் இந்த ஆண்டு ஐபோன் உற்பத்தியில் 5% ஐ இந்தியாவுக்கு மாற்றும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தனர்.

2025 ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஐபோன் உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு தெற்காசிய நாட்டில் இருக்கும் என்றும் அறிக்கை கணித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

13,000 யுக்ரைன் படையினர் பலி: யுக்ரைனிய...

2022-12-02 10:27:47
news-image

பிரேஸில் மண்சரிவில் இருவர் பலி, 30...

2022-12-02 09:23:11
news-image

“ராவணன், ராட்சசன், ஹிட்லர்... என்னை விமர்சிப்பதில்...

2022-12-01 17:06:54
news-image

இந்தியாவின் கதையை பகிர ஜி-20 தலைமை...

2022-12-01 16:39:10
news-image

தென் ஆபிரிக்க ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்கு...

2022-12-01 15:54:26
news-image

கொவிட் கட்டுப்பாடுகளிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் குறித்த...

2022-12-01 15:11:13
news-image

ஐ.எஸ். இயக்கத்தின் தலைவர் அபு ஹசன்...

2022-12-01 14:42:12
news-image

இந்தியா - கயானா சந்திப்பு :...

2022-12-01 14:11:24
news-image

நியூ ஸிலாந்து, பின்லாந்து பிரதமர்களின் சந்திப்புக்கு...

2022-12-01 13:21:36
news-image

இந்தியா - லாட்வியா பிரதிநிதிகள் சந்திப்பு:...

2022-12-01 16:15:14
news-image

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்க விபத்தில் 9...

2022-12-01 09:21:37
news-image

ஆப்கான் குண்டுவெடிப்பில் 16 பேர் பலி

2022-11-30 16:39:17