(நா.தனுஜா)
பொருளாதார நெருக்கடியின் விளைவாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு அவசியமான உணவுப்பொருட்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ள 2 மில்லியன் டொலர் நிதியுதவிக்கு நன்றி தெரிவித்திருக்கும் உலக உணவுத்திட்டம், அதனைப்பயன்படுத்தி பொருட்களின் விலையேற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கத்தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியின் விளைவாக இலங்கையின் மனிதாபிமான நிலைவரம் மோசமடைந்துவருகின்ற நிலையில், மேலும் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இலங்கைக்கு வழங்குவதாகக் கடந்த 16 ஆம் திகதி ஜப்பான் அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்நிதியுதவியானது சர்வதேச கட்டமைப்புக்களின் இலங்கைக் கிளைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்றும், அதன்படி மிகமோசமடைந்துவரும் மனிதாபிமான நிலைவரத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலக உணவுத்திட்டத்தின் ஊடாக 2 மில்லியன் டொலர் பெறுமதியான உணவுப்பொருட்களும், சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் ஊடாக ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான உணவு, போசணை, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளும், யுனிசெப் அமைப்பின் ஊடாக 0.5 மில்லியன் டொலர் பெறுமதியான போசணைப்பதார்த்தங்களும் வழங்கப்படும் என்றும் ஜப்பான் அரசாங்கம் விளக்கமளித்திருந்தது.
ஏற்கனவே கடந்த மேமாதம் 20 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட 3 மில்லியன் டொலர் நிதியுதவிக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ள இந்த 3.5 மில்லியன் டொலர் நிதியுதவியின் மூலம் தற்போதைய நெருக்கடிநிலைக்கு மத்தியில் ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதியுதவியின் பெறுமதி 6.5 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு அவசியமான உணவுப்பொருட்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ள 2 மில்லியன் டொலர் நிதியுதவிக்கு நன்றி தெரிவித்திருக்கும் உலக உணவுத்திட்டம், அதனைப்பயன்படுத்தி பொருட்களின் விலையேற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கத்தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM