இலங்கை இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் இராணுவ தினத்தை (அக்டோபர் 10) முன்னிட்டு இந்து மத பாரம்பரியத்திற்கமைவான ஆசீர்வாத சிறப்பு பூஜைகள் கொழும்பு 6 இல் அமைந்துள்ள மயூராபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவிலில் 2022 செப்டெம்பர் 26ம் திகதி பிற்பகல் இடம்பெற்றன.
இலங்கை இராணுவ இந்து மத சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசீர்வாத பூஜை நிகழ்வுகளின் போது ஆலயத்தின் கருவறைக்குள் இராணுவ கொடி கொண்டுச் செல்லப்பட்டு ஆசிர்வாத பூஜை நிகழ்த்தப்பட்டது. இராணுவ இந்து சங்கத்தின் அழைப்பின் பேரில் நிகழ்வின் பிரதம விருந்தினராக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் கலந்துகொண்டிருந்ததோடு, ஆலய மேள, தாள வாத்திய இசை மற்றும் மணிகளின் ஓசைக்கு மத்தியில் ஆலய பிரதம குருக்களால் இராணுவ கொடிக்கும் ஏனைய படையணி கொடிகளுக்கும் ஆசி வழங்கப்பட்டது.
ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ உதய ராகவ குருக்கள் தலைமையிலான அந்தணர் குழுவினரால் 73 ஆவது ஆண்டு நிறைவையொட்டி இராணுவ உறுப்பினர்களுக்கு ஆசிவேண்டி கடவுளுக்கு பழங்கள், நெய் மற்றும் மாலைகளுடன் அர்ச்சணை நிகழ்த்தபட்டது.
இதன்போது லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் வழிபாடுகளின் நிறைவம்சமாக இராணுவத்தின் சகல உறுப்பினர்கள் சார்பிலும் ஆலயத்தின் மேம்பாட்டுக்கான நன்கொடையும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். சகல கிரியைகளும் ஆலய அறங்காவலர்களுடன் இணைந்து பிரதம குருக்கள் சிவஸ்ரீ உதய ராகவ குருக்கள் அவர்களினால் ஒருங்கிணைப்புச் செய்யப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.
இராணுவ இந்து சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் லால் விஜேதுங்க, பிரதம விருந்தினருக்கு வரவேற்பளித்ததோடு சிரேஸ்ட அதிகாரிகள் பலரது பங்கேற்புடன் வழிபாட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM