வெள்ளறுகின் மருத்துவ பயன்கள்

Published By: Digital Desk 7

27 Sep, 2022 | 05:05 PM
image

வெள்ளறுகு சமூலத்தை உலர்த்தி பாதுகாப்பாக வைத்திருக்க பல ஆண்டுகள் கூட கெடாமல் நின்று பயன்தரக்கூடியது. வெள்ளறுகில் இரும்பு சத்தும், பொட்டாசியம் சோடியம், கல்சியம், குளோரைட், சல்பேட், பொஸ்பேட் மற்றும் விட்டமின் சி மற்றும் பி ஆகியன செறிந்துள்ளன.

வெள்ளறுகு சமூலம் (இலை, பூ, தண்டு, வேர் அனைத்தும்) கைப்பிடி அளவு எடுத்து ஒரு டம்ளர் அளவாகச் சுருக்கி இனிப்பு சேர்த்து உள்ளுக்குக் கொடுக்க கடுமையான வயிற்றுப் புண், வயிற்றுப் பொருமல், வாயு பிடிப்பு, நரம்புகளைப் பற்றிய வீக்கம், வலி, சொறி, சிரங்கு  ஆகியன குணமாகும்.

வெள்ளறுகு சமூலத்தை மைய அரைத்து விழுதாக்கி உடலில் காணும் நமைச்சல், அரிப்பு, சிரங்குகள் இவற்றின் மேல் பூசிவர சில  நாட்களிலேயே குணம் தரும்.

வெள்ளறுகு இலையை எடுத்து சுத்தம் செய்து அரை கைப்பிடி அளவு எடுத்து அரைத்து விழுதாக்கி அதனோடு சிறிது மிளகுத் தூளும் ஒரு திரி வெ.பூண்டுப் பல்லும் சேர்த்து காலையில் பாலில் கலந்து கொடுத்து வருவதால் மேக நோய் குணமாகும்.

வெள்ளறுகு சமூலத்தை மைய அரைத்து வெண்மிளகு ½ தேக்கரண்டி அளவு சேர்த்து நீர்விட்டுக் காய்ச்சி வடித்து அதனுடன் சிறிது பசுவின் வெண்ணெய் சேர்த்து பருகுவதால் உடல் வெப்பம் தணியும். சிறுநீர்த்தாரை எரிச்சல்,மூலச்சூடு, ஆசனவாய் எரிச்சல் ஆகியன  தணியும். சிறுநீரும் தாராளமாக வெளியேறும்.

மாதவிலக்கான முதல் மூன்று நாட்களுக்கு வெள்ளறுகு சமூலத்தை அரைத்து விழுதாக்கி எலுமிச்சம் கனி அளவுக்கு உள்ளுக்குக் கொடுத்துவர பெண் மலட்டுக் காரணமான கருப்பைப் புழு வெளியேறுவதோடு மாதவிலக்குக் கோளாறுகள் பலவும் தீரும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29