ஒரேஞ்ச் எனும் அருமருந்து

By Sindu

27 Sep, 2022 | 05:14 PM
image

* குறைவான கொழுப்புச்சத்து கொண்டதாகவும், மிகுந்த நார்ச்சத்து கொண்டதாகவும் இருப்பது ஒரேஞ்ச் பழத்தின் மற்றொரு சிறப்பு. இதனால் உடலின் தேவையற்ற கொழுப்பின் அளவை குறைக்கக்கூடிய ஆற்றல் இதற்குண்டு. 

* ஒரேஞ்சில் இருக்கும் ஃப்ளேவனொய்ட்கள், ஹெஸ்பெரிடின் போன்ற சத்துக்கள் இதய நலனை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

* தொடர்ந்து நான்கு வாரம் ஒரேஞ்ச் பழம் உட்கொள்வதன் மூலம் இரத்த அழுத்தத்தை கணிசமாக குறைக்க முடியும்.

* விட்டமின் சி, விட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். மாலைக்கண் நோய் போன்றவை ஏற்படாது. 

*ஒரேஞ்ச் பழம் வெள்ளை அணுக்களை இரத்தத்தில் அதிகமாக உற்பத்தி செய்வதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. நார்ச்சத்தும் நிறைந்துள்ளதால் அல்சரை குணப்படுத்தும்.

* ஒரேஞ்சில் உள்ள D-linonene புற்றுநோயை எதிர்க்க சரியான மருந்தாகிறது. பெருங்குடல் புற்றுநோய், நுரையீரல் புற்று, தோல்புற்று, மார்பகப்புற்று போன்றவை வராமல் தடுக்கப்படுகிறது. 

* அன்ட்டி ஒக்ஸிடென்ட் அதிகமுள்ள ஒரேஞ்ச் உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற ஃப்ரீ ரேடிகல்ஸை வெளியேற்றுகிறது, புத்துணர்வும் அளிக்கிறது.

* இரத்தத்தில் சிவப்பணுக்களையும் ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கச்செய்து, இரத்தசோகை பாதிப்பினை தடுக்கிறது. வைரஸ் தொற்று வராமலும் பாதுகாக்கிறது.

*  ஒரேஞ்ச் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது. உணவு வேளைக்குப் பிறகு எடுத்துக்கொள்வது நல்லது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குழந்தையின் நாக்கை சுத்தம் செய்யும்போது...

2022-12-02 10:55:30
news-image

துளசி க்ரீன் டீ குடிப்பதால் கிடைக்கும்...

2022-11-30 16:11:43
news-image

தனியாக உணவு உட்கொண்டால் இதயக்கோளாறு நிச்சயமாம்...

2022-11-30 16:26:14
news-image

க்ளா ஹேண்ட் எனப்படும் சுண்டு விரல்...

2022-11-30 13:49:13
news-image

தாய்ப்பால் சுரப்பை பாதிக்கும் மன அழுத்தம்

2022-11-30 15:59:38
news-image

சீனிக்கு பதிலாக தேனா?

2022-11-30 16:21:16
news-image

ஒரு நாளைக்கு 2 லீற்றர் தண்ணீர்...

2022-11-30 10:30:45
news-image

குருதிநெல்லியின் மருத்துவ குணங்கள்

2022-11-27 12:03:46
news-image

வேதிப்பொருட்களால் அதிகம் பாதிக்கப்படும் குழந்தைகள்

2022-11-25 13:17:56
news-image

ரைனிட்டிஸ் மெடிகமென்டோசா எனும் மூக்கடைப்பு பாதிப்பிற்கான...

2022-11-25 10:44:45
news-image

குழந்தை வயிற்று வலியால் அழுகிறதா?

2022-11-24 17:29:31
news-image

மலச்சிக்கலா ? அலட்சியம் காட்டினால் மூலநோய்...

2022-11-24 12:39:37