கொழும்பை சுற்றி வளைப்போம் : ஜனாதிபதிக்கு ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை

Published By: Digital Desk 3

27 Sep, 2022 | 02:50 PM
image

(எம்.மனோசித்ரா)

பொது மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கடுமையாக்கப்பட்டால் , வெகுவிரைவில் இலட்சக்கணக்கான மக்கள் அலையுடன் கொழும்பை சுற்றி வளைத்து ஜனாதிபதியை சிறைபிடிப்போம்.

முடிந்தால் இதனை தடுத்து எதிர்க்கட்சியிலுள்ள அனைவரையும் கைது செய்யுமாறு ஜனாதிபதியிடம் சவால் விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும் வரை ஜனநாயகம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் ஜனாதிபதியான பின்னர் அவரது சர்வாதிகார செயற்பாடுகளையே முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்.

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதத்திலேயே பிரச்சினை காணப்படுகிறது. சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித சிக்கலும் கிடையாது.

வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதும் தவறில்லை. வன்முறைகள் தலைதூக்குவதற்கு இடமளிக்க முடியாது. ஆனால் எதிர்ப்பினைத் தெரிவிப்பதற்கு மக்களுக்கு காணப்படும் உரிமையை, சட்டத்தை தமக்கேற்றாற்போல வளைத்து முடக்குவதிலேயே பிரச்சினை உள்ளது.

அடக்குமுறைகளை தொடர்ந்தும் பிரயோகிக்க வேண்டாம் என்றும் , மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதியிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

இவை தொடருமானாலும் நாம் நீண்ட நாட்களுக்கு பொறுமையுடன் இருக்கப் போவதில்லை. இன்னும் குறுகிய கால அவகாசத்தை ஜனாதிபதிக்கு வழங்குவோம். அதன் பின்னர் நாம் இலட்சக்கணக்கான மக்களை கொழும்பில் ஒன்று திரட்டி, அவரை சிறை பிடிப்போம்.

முடிந்தால் எம்மை தடுக்குமாறு சவால் விடுக்கின்றோம். அடக்குமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட்டால் , வெகுவிரைவில் நாம் கொழும்பில் பாரிய மக்கள் அலையுடன் களமிறங்குவோம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் நாம் இந்த எச்சரிக்கையை விடுத்தோம். அதனை அவர் கவனத்தில் கொள்ளவில்லை.

மார்ச் 16 ஆம் திகதி அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பித்து வைத்தோம்.

அதே போன்று ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்போம். எனவே முடிந்தால் முழு எதிர்க்கட்சியையும் கைது செய்யுமாறு சவால் விடுக்கின்றோம்.

சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக பதவி வகிக்கும் அரசாங்கத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா பாதுகாப்பு அமைச்சராக செயற்படுவார்.

எனவே தற்போது ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்கள், ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயற்பட வேண்டும். மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கும் அனைவரும் எமது அரசாங்கத்தில் பொறுப்பு கூற வேண்டும். அவர்கள் அனைவருக்கும் நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் ராஜபக்ஷ்வினருக்கும் எந்த...

2023-09-26 19:50:49
news-image

அலி சப்ரி - ஜெய்சங்கர் சந்திப்பு...

2023-09-26 17:04:48
news-image

நாட்டில் நடமாடும் கொள்ளைக் கும்பல் :...

2023-09-26 17:25:05
news-image

இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு : விசாரணைகளை...

2023-09-26 19:41:18
news-image

கருத்துச்சுதந்திரத்தின் அவசியத்தை இலங்கையிடம் வலியுறுத்தியது பிரித்தானியா

2023-09-26 19:01:03
news-image

இலங்கையில் சினோபெக் நிறுவனத்தின் விநியோக செயற்பாடுகளை...

2023-09-26 20:04:20
news-image

முல்லைத்தீவில் புலிகளின் ஆயுதங்கள், தங்கம் தேடிய...

2023-09-26 19:00:05
news-image

போரில் உயிரிழந்தவர்களுக்கான பொது நினைவுச்சின்னம் :...

2023-09-26 17:10:33
news-image

பிரான்ஸ் தூதுவர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்

2023-09-26 20:01:05
news-image

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரின் திடீர்...

2023-09-26 20:00:41
news-image

தளபாட விற்பனை நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து...

2023-09-26 17:04:11
news-image

திருடிய குற்றத்துக்காக எவரையும் தாக்க முடியாது...

2023-09-26 19:56:45